ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு (செப்.1, 2014) முதல் அமலுக்கு வந்தது.. | Tamil247.info
Loading...

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு (செப்.1, 2014) முதல் அமலுக்கு வந்தது..

ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு (செப்.1, 2014) முதல் அமலுக்கு வந்தது..

மத்திய அரசு அறிவித்திருந்தபடி சுங்கச் சாவடி கட்டண உயர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன் எதிரொலியாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பேருந்து நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளன.

இதுகுறித்து அச் சங்கத்தின் தலைவர் பாண்டியன் கூறியது:

அறிவித்தபடி கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வந்துள்ளோம். சாதாரண பேருந்துகளில் 10 சதவீத அளவுக்கும், குளிர்சாதன வசதிகொண்ட பேருந்துகளில் 20 சதவீத அளவுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

omni bus ticket rate hike in tamilnadu

தீபாவளி பண்டிகையின்போது சாதாரண பேருந்துகளில் 30 சதவீத அளவுக்கும், குளிர்சாதன பேருந்துகளில் 40 சதவீத அளவுக்கும் கட்டணம் உயர்த்தப்படும் என்றார்.

ஆனால், இந்த திடீர் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு திருநெல்வேலிக்குச் சென்ற ராஜேந்திரன் என்ற பயணி கூறியது:

டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றபோதும், கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை சென்று வருகிறேன். இதுவரை குளிர்சாதன வசதி கொண்ட ஆம்னி பேருந்தில் அதிகபட்சம் ரூ. 850 அளவுக்குத்தான் கட்டணம் வசூலித்தனர். பண்டிகை காலங்களில் மட்டுமே ரூ. 1,000, ரூ. 1,500 என்ற அளவுக்கு கட்டணம் வசூலிப்பர்.

ஆனால், இப்போது சாதாரண நாளிலேயே பகிரங்கமாக ரூ. 1,000 கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் பேருந்துக்கு பேருந்து கட்டணம் நிர்ணயம் வேறுபடுகிறது. சில பேருந்துகளில் ரூ. 1,100, ரூ. 950 என வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

பண்டிகை காலத்தில் இந்தக் கட்டணம் இருமடங்காக வாய்ப்பு உள்ளது. எனவே, ஆம்னி பேருந்துகளுக்கு அரசே கட்டணம் நிர்ணயிக்கும்போதுதான், சாதாரண மக்கள் தாங்கக் கூடிய சீரான கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

omni bus ticket rate hike in tamilnadu, Toll gate rate hike vs omni bus price raise, sogusu perundhugalin kattana vivaram, omni bus rate for Diwali, Tamil news, tamilnadu news, sogusu perundhugal, semi sleeper price, chennai semi sleeper, ultra delux bus, sleeper perundhu ticket vilai vivaram, kattana vuyarvu
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு (செப்.1, 2014) முதல் அமலுக்கு வந்தது..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு (செப்.1, 2014) முதல் அமலுக்கு வந்தது..
Tamil Fire
5 of 5
ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு (செப்.1, 2014) முதல் அமலுக்கு வந்தது.. மத்திய அரசு அறிவித்திருந்தபடி சுங்கச் சாவடி கட்டண உயர்வு ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment