அந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா? | Tamil247.info
Loading...

அந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா?

தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத பெண்களின் அதீத கவனத்திற்கு..

 தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா?

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவ ர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த

ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்…

இப்பிரச்சினைக்கான காரணங்கள்….

# இயல்பாகவே சில பெண்களுக்கு செக்ஸில் அவ்வளவாக நாட்டமிருக்காது. உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண்உறவை வெறுக்கவும்மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது.

# செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது.

# விருப்பமிருந்தாலும்கூட இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.


women hate intercourse, women not having desire with man, thambathiya uravil aarvam illai

# உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்றபயங்கள் , மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.

# முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில், குழந்தைபிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம்.

#உறவின்போது கணவன் ஒரேமாதிரியான நிலைகளைக்கையாள்வது, வெறித்தனமான நடவடிக்கைகளைக் கையாள்வது என்றெல்லாம் நடந்துகொள்கிற போதும் மனைவிக்கு செக்ஸின்மீது வெறுப்பு ஏற்படலாம்.

#கூட்டுக்குடும்பங்களில் இருக்கிறபெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.

#குழந்தை பெற்றுக்கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவுகொள்வதையே தவிர்ப்பார்கள். தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள்.

# தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒரு விதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்ற வற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.

சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒருவேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண்களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகிவிடும்.

# கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரியவரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள். கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.

# தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டிவரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம்.

**கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டுவிடுவது தவறு.

இது tamil247.info இணையத்தின் பதிவு அல்ல‍!

Pengal thambathiya uravil naatamillamaikku karanam, en pondaatti thambathiya uravukku vara marukkiraal, pengal thambathiya uravu kolarugal, thambathiya uravil sikkal, kanavn manaivikku idaiye ulla sikkalgal, kulandhai pirappu, alagu, pirapurippil vali pondra kaarangal, Aan mattrum pen illara valkkai, women hate intercourse, women not having desire with man, girls don't like to sleep with husband
Loading...

எனதருமை நேயர்களே இந்த ' அந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
அந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா?
Tamil Fire
5 of 5
தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத பெண்களின் அதீத கவனத்திற்கு..  தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா? பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment