பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!! | Tamil247.info

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!

பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன் நலத்திற்கு முக்கிய அம்சங்களாக விளங்கும் உணர்ச்சி, உடல் மற்றும் ஹார்மோன் காரணிகளை சமாளிக்க முடியும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல் வாழ்க்கை கிடைக்க பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் மிகவும் முக்கியமாகும்.

பாலியல் ஆரோக்கியம் என்பது மனித பாலினத்திற்கும், மனித பாலியல் குணத்தை உருவாக்கும் சில சிக்கலான காரணிகளை புரிந்து கொள்வதற்குமான நேர்மறையான அணுகுமுறையாக விளங்குகிறது. பாலியல் என்பது நேர்மறையான மற்றும் வாழ்க்கை முழுவதும் பின் தொடரும் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனாகும். இது குறிப்பிட்ட நம் குணங்களையும் தாண்டி இருக்கும்.
paaliyal arokiyam patriya thagavlgal pengalukkana padhivu


ஆரோக்கியமான பாலியல் வளர்ச்சி என்பது உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்லாது பாலியல் குணங்கள் மற்றும் ஆரோக்கிய தேவைப்படுகளையும் குறிக்கும். உணர்ச்சி ரீதியான முதிர்ச்சி மற்றும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சி போன்ற இன்ன பிற முக்கியமான கூறுகளையும் குறிக்கும். பல பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. அதனால் எழப்போகும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியும் தெரிவதில்லை.

ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் என வரும் போது, பெண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக உதவி நாடிட சங்கடப்படாதீர்கள்; அதுவும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான உடலை பேணிட இது உங்களுக்கு கண்டிப்பாக உதவிடும்.

ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் என வரும் போது, பெண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக உதவி நாடிட சங்கடப்படாதீர்கள்; அதுவும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான உடலை பேணிட இது உங்களுக்கு கண்டிப்பாக உதவிடும். ஆரோக்கியமாக இருந்திட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல் நலன்கள், இதோ!

பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்கள்

ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் வேகமாக அதிகரிக்கும் பண்பை கொண்டது. அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை நோய் ஏற்படும் அளவிற்கு கூட போய் விடலாம். எரிச்சல், புண் மற்றும் யோனி, யோனிமுகம், ஆசனவாய் சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்ற பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்களே இதற்கான பொதுவான அறிகுறிகளாகும். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, இதனால் வலியும் கூட உண்டாகலாம். பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஈஸ்ட் தோற்று என்பது எந்த பெண்ணிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) பாக்டீரியாவால் கூட ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவது மிகவும் அரிதே..

STD-ஐ குறைக்க ஆணுறைகளின் முக்கியத்துவம்

உடலுறவு கொள்ளும் போது ஆணுறைகளை பயன்படுத்தி, HIV பரவாமல் இருக்கவும் வேறு சில உடலுறவு ரீதியான தொற்றுக்கள் பரவாமல் (STI) இருக்கவும் தடுக்கலாம். ஆனாலும் கூட உடலுறவு கொள்ளும் போது, பலரும் எந்த ஒரு பாதுகாப்பையும் உபயோகிப்பதில்லை. ஆனால் உங்களையும், உடலுறவு கொள்ளும் அந்த பெண்ணின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை காத்திடவும், ஆணுறை பயன்படுத்துவதை மறக்காதீர்கள். பலரிடம் உடலுறவு வைத்தக் கொண்டால் STD உண்டாகலாம். இருப்பினும் ஆணுறை பயன்படுத்தினால் அதற்கான இடர்பாடு குறையும்.

டெஸ்டோஸ்டிரோன் (ஆண்மை இயக்கு நீர்)

டெஸ்டோஸ்டிரோன் என்பது மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. பெண்களின் பாலியல் உணர்வை தூண்டுவதிலும் இது தொடர்புடையது. பெண்களின் டெஸ்டோஸ்டிரோன் தான் அதிகமானவை. 20-களில் இருக்கும் அந்த எண்ணிக்கை வயதாக வயதாக அதன் எண்ணிக்கையும் குறையும். பெண்களின் கருப்பை தான் அவர்களின் வாழ்நாள் முழுவதும் டெஸ்டோஸ்டிரோனை உருவாக்கும். ஒருவேளை, அதன் உற்பத்தி பெருமளவில் குறைய தொடங்கி விட்டால், லிபிடோ குறைவு அல்லது மகிழ்ச்சி அளிக்கிற பாலுணர்வு குறைவை உண்டாக்கிவிடும். வயது ஏற ஏற இதுவும் மெதுவாக குறையத் தொடங்கிவிடும். ஹார்மோனின் அளவு குறைவதால், யோனி மற்றும் பெண்குறி ஆகிய இடத்தில் உணர்திறன் குறைந்துவிடும். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடையாத பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையை தவிர்க்க சொல்கிறார்கள் பெண்களின் பாலியல் ரீதியான உடல்நல வல்லுனர்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு, பாலியல் உணர்வுகள் மீண்டும் உயிர்ப்பு பெறுகின்ற நேர்மறையான விளைவுகளை காட்டியுள்ளது.

பெண்களின் பாலியல் செயல் பிறழ்ச்சி

பெண்களின் பாலியல் செயல் பிறழ்ச்சி என்பது பல பெண்களுக்கும் தெரியாத மிக முக்கியமான பாலியல் ரீதியான உடல்நலன் தகவலாகும். உடல் ரீதியாக சுகத்தை உணரமுடியாத (குறிப்பாக உடலுறவு கொள்ளும் போது) அனுபவத்தை பெண்கள் சந்திக்கும் போதே இது ஏற்படுகிறது. பெண்களின் பாலியல் ரீதியான உடல்நலன் படி, பெண்களின் பாலியல் செயல் பிறழ்ச்சி என்பது பொதுவான ஒன்று தான். 18 முதல் 59 வயதை கொண்ட பெண்களில் 43% பேர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடல், உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பல பாலியல் அம்சங்களை நிவர்த்தி செய்தால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.

கருப்பை சுவரியக்கம்

சில நேரம் உடலுறவின் போது ஆண்கள் தங்களின் ஆணுறுப்பை நுழைக்கும் போது, பெண்களுக்கு அது அதிக வலியை ஏற்படுத்தலாம். அதற்கு முக்கிய காரணம் கருப்பை சுவரியக்கமே தவிர யோனியினால் கிடையாது. கருப்பை சுவரியக்கம் என்பது ஒரு மருத்துவ ரீதியான நிலை. அதன் படி யோனி தசைகள் குறிப்பிட்ட ஒரு அளவு அவரை நன்றாக இறுகிக் கொள்ளும். இதனால் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் வலியை சந்திப்பார்கள். இது டென்ஷனால் கூட ஏற்படும் ஒன்று. இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால், தம்பதிக்கு இடையே பெரிய பிரச்சனையாகிவிடும்.

உடலுறவில் அலர்ஜி

உடலுறவுக்கு பின் யோனியில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை எல்லாம் சில அலர்ஜிகளாகும். விந்துவினால் ஏற்படும் சில ஒவ்வாமையால் தான் பெண்களுக்கு உடலுறவு தொடர்பான அலர்ஜி உண்டாகிறது. இது விந்து திரவத்தில் இருக்கும் புரதத்தின் வகையை பொறுத்து அமைவதால், இந்த அலர்ஜியின் தன்மை ஒவ்வொருவரை பொருத்தும் மாறுபடும். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால், பெண்களுக்கு காப்புப்பிறழ்வு (அனாபிலாக்ஸிஸ்) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

சிறுநீரக அடங்காமை

சிறுநீரக அடங்காமை என்பது சிறுநீர்ப்பையிலிருந்து எதிர்பாராத அளவில் சிறுநீர் கழிப்பது. இது ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையே. கர்ப்பம், பிரசவம் மற்றும் இறுதி மாதவிடாய் ஆகிய நேரங்களில் பெண்ணுக்கு இது ஏற்படலாம். பெண்ணுக்கு இருக்கும் பொதுவான சிறுநீரக அடங்காமையை மன அழுத்த சிறுநீரக அடங்காமை (SUI) என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சிறுநீர்ப்பை சுருக்குதசை இருமல், சிரித்தல், தும்மல் அல்லது சில உடற்பயிற்சியில் ஈடுபடும் அழுத்தத்தால் சிறிய அளவிலான சிறுநீரை உருவாக்கும். இதனை தவிர்க்க பெல்விக் தரை தசை பயிற்சிகளை செய்யலாம்.

இறுதி மாதவிடாய் நிறுத்தம்

இனப்பெருக்க திறன்களின் முடிவை பெண்கள் அடையும் காலம் உள்ளது. பல பெண்கள் 45 முதல் 55 வயதிலான கால கட்டத்தில் இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடைவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தின் போது மனநிலை மாற்றங்கள், அளவுக்கு அதிகமான உணர்ச்சிகள் மற்றும் உணர்திறன் மிகைப்பு ஆகியவற்றை பெண்கள் அனுபவிப்பார்கள். ஹாட் ஃப்ளாஷ், வறட்சியாகும் யோனி, பாலியல் ஈடுபாட்டில் குறைவு மற்றும் இரவு நேர புழுக்கங்கள் போன்ற சில அறிகுறிகளையும் பெறுவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு மருந்துகள், சுய பராமரிப்பு பயிற்சிகள் என பல சிகிச்சைகள் முறைகள் தேவைப்படும். இவைகளே பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகளாகும். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...
Tags: paaliayl kelvi badhilgal, paliyal arokiyam patri pengal therindhu kolla vendiya sila thagavlgal, paaliayl pirachanai, suya inbam seivadhu arokkiyam, suya inba pirachanai, pengal suya inbam, aangal suya inbam, illara inbam

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!! ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!!
Tamil Fire
5 of 5
பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!! பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News