26 ஆகஸ்ட் 2014

,

பேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..??

"பேஸ்மேக்கர்' வைத்துக்கொண்டால் மின்சாரத்தைக் கையாளும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

"கரண்ட் ஷாக்' அடித்தால் மிகவும் ஆபத்து. அதே போல கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மிஷின் போன்றவை ஓடிக் கொண்டிருக்கும்போது அருகில் நீண்ட நேரம் நிற்கக் கூடாது. கூடுமானவரை 10 அடி தள்ளி நிற்க வேண்டும். "டிவி' பார்க்கலாம். ஆனால் அதன் ஒளி நம்மீது படாதவாறு 10 அடி தூரத்தில் இருந்து பார்க்கலாம். மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் நிற்கக் கூடாது.

மின்சார ரயிலில் பயணத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. "டிரில்லர்' போன்ற வேலையில் ஈடுபடக் கூடாது. கார், பஸ்களில் இஞ்ஜின் முன் அமர்வதை தவிர்க்க வேண்டும். "மின்னல்' மேலேபடக்கூடாது. அதிகம் கடுமையான வெயிலில் நடக்கக் கூடாது. வெயிலில் வெளியே போவதை அறவே விட்டுவிட வேண்டும். பொதுவாக மருத்துவர்கள் இதையெல்லாம் செய்யலாம் ஒன்றும் பாதிப்பில்லை என்று தான் சொல்வார்கள். ஆனால்  எனது அனுபவத்தில் பேஸ்மேக்கரில் இருபதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவன் என்கிற முறையில், இவற்றால் பல இன்னல்கள்  பட்டுள்ளேன். ஓடுவது,வேகமாக நடப்பது சில சமயம் மூச்சுத்திணறலை அதிகமாக்கும்.

Pacemaker care for heart patients, Pacemakerudan valvadhu sulabama, pacemaker udan vazhvadhu eppadi, Idhaya noikku pacemaker price

தோள்களுக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடாது. சுமைகளை தூக்குவது, எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பேஸ்மேக்கர் வைத்துக் கொண்ட பின் ஒரு `Permanent Pacemaker Card' என்று ஒன்று வழங்குவார்கள். அதில் இந்த பேஸ்மேக்கர் என்ன மாடல், எந்த டாக்டர் என்ற விவரம் இருக்கும். இந்தக் கார்டை எங்கு வெளியில் சென்றாலும் கையோடு கொண்டு போக வேண்டும். ஆபத்தான நேரத்தில் இது பயன்படும். விமானப் பயணத்தின் போது டிக்கெட் வாங்கும்போதே  இந்த கார்டைகாட்டி டிக்கெட் வாங்கினால், " பேஸ்மேக்கர்' பொறுத்தப்பட்டவர் எங்கு அமர வேண்டுமோ? அங்கு அமரும் இடத்தை ஒதுக்குவார்கள். விமானத்தில் இதற்கென்று ஒதுக்கபட்ட இடம்  இருக்கும். அதை விடுத்து வேறு இடத்தில் அமரக் கூடாது.

எந்த டாக்டரிடம் போனாலும், அவரிடம் நான் பேஸ்மேக்கர் நோயாளி என்று முதலில் அறிவித்து விட வேண்டும். அப்போதுதான் சரியான மருந்து கொடுப்பார்கள்.

பேஸ்மேக்கருக்கு ஈர்ப்பு சக்தி அதிகம்.அதனால் குறைவான "டோúஸஜ்' மருந்துதான் கொடுப்பார்கள்.புகை, தூசி, போன்றவற்றில் போவதை தடுத்துக் கொள்ள வேண்டும்.பேஸ்மேக்கர் நோயாளி எங்கு, எப்போது, எந்த இடத்திற்குப் போனாலும் நமக்கு பேஸ்மேக்கர் இருக்கிறது ஆகவே அதற்கு ஏற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்மேக்கரை குறைந்த பட்சம் ஆறுமாதத்திற்கு ஒருமுறை "செக்' செய்து கொள்ள வேண்டும். இதய மருத்துவரிடம் சென்றால் அவர் எந்த பேஸ்மேக்கர் கம்பனியோ, அந்த கம்பெனிக்காரரை அழைத்து "செக்' செய்து தர ஏற்பாடு செய்வார். பேஸ்மேக்கர் செக் செய்து நன்றாக செயல்பட்டால், நன்றாக இருக்கிறது என்று சொல்லுவார்கள். இல்லையென்றால் இதை ஓரிரு மாதங்களுக்குள் மாற்றி விட அறிவுரை வழங்குவார்கள். இன்று ஒரு பேஸ்மேக்கர் விலை குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும். இது மேலும் உயருமே தவிர குறையாது.

பேஸ்மேக்கர் பொருத்த மொத்த செலவு இரண்டரை லட்சம் வரை ஆகும்.

Pacemaker care for heart patients, Pacemakerudan valvadhu sulabama, pacemaker udan vazhvadhu eppadi, Idhaya noikku pacemaker price more than 2.5 lack rupees, Price of a pace maker,  Heart operation, Details for heart patients, Tamil idhaya noi, idhaya kolaru, sayalatra idhayam எனதருமை நேயர்களே இந்த 'பேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..?? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News