முட்டையின் வெள்ளை கரு நல்லதா? மஞ்சள் கரு நல்லதா..?? | Tamil247.info

முட்டையின் வெள்ளை கரு நல்லதா? மஞ்சள் கரு நல்லதா..??

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
ஆரோக்கியமான காலை உணவு என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையானது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவில் முட்டைக்கு முக்கிய பங்கு உள்ளது. உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் முட்டை, அன்றைய நாள் சிறப்பாக செல்ல அளவுக்கு அதிகமான ஆற்றல் திறனையும் அளிக்கும். ஆனால் எது சிறந்தது, முட்டையின் வெள்ளை கருவா அல்லது மஞ்சள் கருவா?

ஊட்டச்சத்தின் மீது அக்கறை கொள்பவர்கள் வாக்குவாதம் செய்வதற்கு இது ஒரு பொதுவான விஷயமாகும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் இருக்கும் ஊட்டச்சத்தின் மதிப்பு என்ன? காலை உணவில் முட்டை சிறந்த உணவாக விளங்குகிறது. அது மட்டுமல்லாமல் சுவைமிக்க உணவாகவும் உள்ளது. ஆனால் முட்டையின் மஞ்சள் கருவை உண்பதில் பலருக்கும் தயக்கம் இருக்கும். காரணம் அவை உடல் எடையை அதிகரிக்க செய்து கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும் என்ற பயமே.

உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

ஆனால் சுவைமிக்க மஞ்சள் கருவை ஒதுக்கி வைத்தால், அது நீங்கள் செய்யும் பெரிய தவறாக போய் முடியும். இருப்பினும் முட்டையின் வெள்ளை கருவில் கொழுப்பும், கலோரிகளும் குறைவு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆனாலும் மஞ்சள் கருவில் பல ஊட்டச்சத்து பயன்கள் அடங்கியுள்ளது. அது உங்கள் மூளை, மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு உணவாக அமையும். அப்படியானால் என்ன பிரச்சனை? மிகவும் ஆரோக்கியமானது முட்டையின் மஞ்சள் கருவா அல்லது வெள்ளை கருவா?

முட்டையின் வெள்ளை கருவில் என்ன உள்ளது?
Muttai vellai karu, manjal karu vitamins, vellai karu proteins, egg white, egg yellow, health news in tamil

முட்டையின் வெள்ளை கருவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அவை கொழுப்பை விரும்பாத நபர்களுக்கு சொர்க்கமாக விளங்கும். முட்டை என்பது கூடுதல் கலோரிகள் கொண்ட உணவு அல்ல. ஆனால் அதன் மஞ்சள் கருவை சற்று எடுத்து விட்டாலும் கலோரிகளும் சிறிதளவு குறையும். அதனால் ஒரு முழு முட்டை மற்றும் இரண்டு முட்டைகளின் வெள்ளை கருக்களோடு சுவையான ஆம்லேட் செய்து உண்ணலாம். 3 முழு முட்டையுடன் ஒப்பிடுகையில் இது சிறந்த தேர்வாக விளங்கும். மீண்டும் சொல்கிறோம், முட்டையின் வெள்ளை கருவில் கொலஸ்ட்ரால் கிடையாது. ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அடங்கியுள்ளது. ஆம், மஞ்சள் கருவை நீக்கி விட்டால், ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலும் அதனுடன் சேர்ந்து நீங்கிவிடும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் உள்ளவர்களும் வயதானவர்களும் இதனை கடைப்பிடிக்கலாம்.

புரதச்சத்து நிறைந்த வெள்ளைக்கரு

கடைசியாக, முட்டையின் வெள்ளை கரு என்பது புரத்தத்தின் அரசனாகும். அதனால் அது உங்களுக்கு மிகவும் நல்லதாகும். புரதம் என்ற அடிப்படையில், முட்டையின் மஞ்சள் கருவா அல்லது வெள்ளை கருவா என்ற கேள்விக்கு குழப்பம் இருக்காது. முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிகமாக வருகிறது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.


முட்டையின் மஞ்சள் கருவில் என்ன உள்ளது?

வைட்டமின்கள் என்று வரும் போது, முட்டையின் மஞ்சள் கருவில், வெள்ளை கருவை விட அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் அடங்கியுள்ளது. அதை நம்மில் பலரும் உணருவதில்லை. ஒரு மஞ்சள் கருவில் பி6, ஃபோலேட், பி வைட்டமின், பி12, ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இவைகள் முட்டையின் வெள்ளை கருவில் இருப்பதில்லை. இயற்கையாகவே வைட்டமின் டி அடங்கியிருக்கும் அரிதான உணவுகளில் முட்டையின் மஞ்சள் கருவும் ஒன்று என்ற செய்தி உங்களுக்கு சுவாரஸ்யமான தகவலாக அமையும்.

இரும்புச்சத்து நிறைந்த மஞ்சள் கரு

ஆம், முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை தான். ஆனால் அதில் வைட்டமின்களும், கனிமங்களும் கூட அடங்கியுள்ளது. இது உங்கள் உடல் செயற்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமானவையாகும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் 13 வகையான கனிமங்கள் உள்ளது. அதில் கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் மற்றும் செலினியம் அடக்கம். இதில் அதிகமானவை முட்டையின் மஞ்சள் கருவிலேயே உள்ளது. உதாரணத்திற்கு, 90 சதவீத கால்சியம் முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது. அதே போல் 90 சதவீத இரும்புச்சத்தும் கூட முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது. இப்போ என்ன சொல்றீங்க?

குறிப்பு

மிகவும் ஆரோக்கியமானது முட்டையின் மஞ்சள் கருவா அல்லது வெள்ளை கருவா? இந்த கேள்விக்கு ஒரே பதில் தான் உள்ளது. அதிகமாக வெள்ளை கருவை உட்கொள்ளுங்கள். அதற்காக மஞ்சள் கருவை ஒதுக்காதீர்கள்.

Muttai vellai karu, manjal karu vitamins, vellai karu proteins, egg white, egg yellow, health news in tamil, satthulla unavugal, which one is good in egg, 

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'முட்டையின் வெள்ளை கரு நல்லதா? மஞ்சள் கரு நல்லதா..??' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
முட்டையின் வெள்ளை கரு நல்லதா? மஞ்சள் கரு நல்லதா..??
Tamil Fire
5 of 5
ஆரோக்கியமான காலை உணவு என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையானது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவில் முட்டைக்கு முக்கிய பங்கு உள்ள...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News