இளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரும்புப் பொருள்கள் | Tamil247.info

இளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரும்புப் பொருள்கள்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
சேலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் வயிற்றில் இருந்து சுமார் ஒரு கிலோ இரும்புப் பொருள்கள் எடுக்கப்பட்டுள்ளது.

3 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து இரும்புப் பொருள்கள் அகற்றப்பட்டன.

சேலம் ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (34). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக செல்வகுமார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

iron particles in stomach, tamil news, stomach operation to remove iron magnet

இதையடுத்து, அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது வயிற்றில் இரும்புப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் ஸ்கேனில், அவரது வயிற்றில் இருந்த கூர்மையான பொருட்களால் சிறு குடல் பகுதியில் ஓட்டை விழுந்திருந்ததும், சிறுகுடல் பகுதியில் உள்ள திரவங்கள், வயிற்று பகுதியில் கசிந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதும் தெரியவந்தது.  இந்த நிலையில், மருத்துவர்கள் சுமதி, சாஸ்தா, கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர், சுமார் 3 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து செல்வகுமாரின் வயிற்றில் இருந்து போல்டு, நட்டுகள், சாமி டாலர்கள், சில்லறைக் காசுகள், ஊசிகள், கம்பிகள், காந்தக் கட்டிகள் உள்ளிட்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள இரும்புப் பொருள்களை அகற்றினர்.

இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செல்வகுமார் கடந்த சில ஆண்டுகளாக இந்த இரும்புப் பொருள்களை யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரது வயிற்றில் இருந்து 58 இரும்புப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. வயிற்றில் காயங்கள் ஏற்பட்டதை அடுத்தே அவர் இரும்புப் பொருள்களை சாப்பிட்டது தெரிய வந்துள்ளது என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மோகன்.
Ilaignar vayitril irundhu edukkappatta oru kilo irumbu porutkal, salem mana nalam badhikkapatta ialignar vayitril irumbu, wire, kaandham, vinodha seidhigal, vinodhangal,இளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரும்புப் பொருள்கள்(iron, magnet, coin, wire in stomach), adhisayam,tamil news, tamilnadu news, iron particles in stomach, tamil news, stomach operation to remove iron magnet
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரும்புப் பொருள்கள் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரும்புப் பொருள்கள்
Tamil Fire
5 of 5
சேலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் வயிற்றில் இருந்து சுமார் ஒரு கிலோ இரும்புப் பொருள்கள் எடுக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் அறுவைச்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News