மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர் | Tamil247.info

மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

3 பெண்களை திருமணம் செய்தார்: கல்யாண மன்னனாக வலம் வந்த சினிமா நடிகர் கைது..

தேனி,

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி கல்யாண மன்னனாக வலம் வந்த சினிமா நடிகரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சினிமா துணை நடிகர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவருடைய மகன் ராஜ்குமார் (வயது 24). இவருடைய மனைவி கலைச்செல்வி (24). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி பெற்றோர்கள் முன்னிலையில் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஷ்வாஸ்ரீ என்ற மகன் இருக்கிறான்.

ராஜ்குமார் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப் புலி’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். மேலும் தற்போது ‘ஜெயமுண்டு பயமில்லை’, ‘தெருக்கூத்து பசங்க’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

3 திருமணங்கள்

சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு சென்ற இடத்தில் அயனாவரத்தை சேர்ந்த அபிராமி (28) என்ற பெண்ணை ராஜ்குமார் 2-வ தாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறாள்.
CInema side actor married 3 women,  rajkumar cinema side actor, moondru pengalai emaatri thirumanam seidha cinema dhunai nadigar kaidhu, tamil news
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த திவ்யா என்பவரை ராஜ்குமார் 3-வதாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். திவ்யா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறப்படுகிறது. ராஜ்குமார் 3-வது திருமணம் செய்துள்ள தகவல் முதல் மனைவி கலைச்செல்விக்கும், 2-வது மனைவி அபிராமிக்கும் தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வியும், அபிராமியும் சந்தித்து பேசிக்கொண்டனர். தங்களை திருமணம் செய்து ஏமாற்றிய ராஜ்குமார் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க இருவரும் முடிவு செய்தனர்.

போலீசில் புகார்

அதன்படி ராஜ்குமாரின் முதல் மனைவி கலைச்செல்வியும், 2-வது மனைவி அபிராமியும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷிடம் கலைச்செல்வி ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை திருமணம் செய்ததை மறைத்து மேலும் 2 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறி இருந்தார்.

அவரது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் முத்துலட்சுமிக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராஜ்குமார் தனது தாயார் இறந்ததையடுத்து சொந்த ஊருக்கு வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ராஜ்குமாரை கைது செய்தனர்.

3 திருமணம் செய்து கல்யாண மன்னனாக திகழ்ந்த ராஜ்குமார் துணை நடிகைகள் யாரையும் தனது வலையில் வீழ்த்தி உள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#arrest #cinemasideactor #illegalmarriege , CInema side actor married 3 women,  rajkumar cinema side actor, moondru pengalai emaatri thirumanam seidha cinema dhunai nadigar kaidhu, tamil news, hot cinema news, daily news in tamil
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்
Tamil Fire
5 of 5
3 பெண்களை திருமணம் செய்தார்: கல்யாண மன்னனாக வலம் வந்த சினிமா நடிகர் கைது.. தேனி, 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி கல்யாண மன்னனாக வலம்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News