26 ஆகஸ்ட் 2014

, , , , , ,

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம்

நடிகர் : பரத்,காதல் தண்டபாணி, தம்பி ராமையா, மனோபாலா, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி
நடிகை :‘அட்டகத்தி’ நந்திதா, ரேணுகா
இயக்குனர் : எல்.ஜி.ரவிச்சந்தர்
இசை: சைமன்
ஒளிப்பதிவு : பி.ஜி. முத்தையா

கதையின் கரு:  படிப்பறிவு இல்லாத ஒரு இளைஞருக்கு ஏற்படும் பாதிப்புகள்.
பரத், தலைமுறை தலைமுறையாக சித்த வைத்தியத்துக்கு பெயர் போன குடும்பத்தை சேர்ந்தவர். ஆரம்ப பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் அடித்தார் என்பதற்காக, என் பிள்ளைக்கு இந்த படிப்பே வேண்டாம் என்று படிப்பை நிறுத்தி விடுகிறார், அவருடைய அப்பா (காதல் தண்டபாணி) படிப்பறிவு இல்லாததால் பரத்தை அவருடைய நண்பர்களே ஏமாற்றி பிழைக்கிறார்கள்.

இது தெரியவந்ததும், தனக்கு படித்த பெண் ஒருத்தி மனைவியாக வந்தால், யாரும் தன்னை ஏமாற்ற முடியாது என்று பரத் நம்புகிறார். இதற்காக, நண்பர் கருணாவுடன் சென்று கல்லூரி வாசலில் தவம் கிடக்கிறார். அப்போது அவருடைய பார்வையில் பட்டு காதல்வசப்பட வைக்கிறார், நந்திதா. படிக்காதவர் என்று தெரிந்தால் பெண் கொடுக்க மாட்டார்கள் என்று கருதி, பரத்தை எம்.பி.பி.எஸ். டாக்டர் என்று பொய் சொல்கிறார்கள்.
aintham thalaimurai siddha vaidhya sigamani movie review
இதேபோல் நந்திதாவிடமும் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, திருமண ஏற்பாடு செய்கிறார்கள். பரத்நந்திதாவுக்கு திருமணம் நடக்கிறது. முதல் இரவு அறைக்குள் தன்னை நிறைய படித்தவர் என்று காட்டிக் கொள்வதற்காக, பரத் ஏகப்பட்ட புத்தகங்களை அடுக்கி வைக்கிறார். அதைப்பார்த்த நந்திதா மயங்கி விழுகிறார்.

அவருடைய மயக்கத்துக்கு காரணம் என்ன, பரத் ஒரு சித்த வைத்தியர் என்ற உண்மை நந்திதாவுக்கு தெரியவந்ததா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது, கிளைமாக்ஸ்.
ஒரு சித்த வைத்திய குடும்பத்தின் படிக்காத இளைஞர்படிக்காததால் நண்பர்களிடமே ஏமாறுபவர் என்ற தமாசான கதாபாத்திரத்தில், பரத். இதற்கு முன்பு பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், இந்த படத்துக்காக அவர் தன்னை நிறைய மாற்றிக்கொண்டிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து காமெடி செய்யும்போது சிரிக்க வைப்பவர், ஒவ்வொரு முறையும் பிரச்சினைகளில் சிக்கி திணறும்போது,  அய்யோ மாட்டிக் கொள்ளப் போகிறாரே என்று பதற்றப்பட வைக்கிறார்.
பறந்து வந்து அடிக்கிற சண்டை காட்சிகளில், பரத் சாகசம் காட்டியிருக்கிறார்.

தெத்துப்பல் தெரிய அழகாக சிரிக்கும் நந்திதா, படத்துக்கு பிளஸ். மாமியார் ரேணுகா ஆங்கில பத்திரிகையை படிக்க சொல்லும்போது நெளிவது; போஸ் வெங்கட்டிடம் மாட்டிக்கொண்டு தவிப்பது என நந்திதாவுக்கு நடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம்.

படத்தில், பரத்நந்திதாவுக்கு அடுத்தபடியாக பேசப்படுபவர், தம்பிராமய்யாதான். பால் செம்புடன் முதல் இரவு அறைக்கு போகும் நந்திதாவிடம், மகளே, தாம்பத்யம் என்பது கருவாடும், தட்டப்பயிறும் கலந்து செய்த குழம்பு மாதிரி. சிறுக சிறுகத்தான் ஊத்தணும். ஒரேயடியாக கவிழ்த்திர கூடாது என்று இவர் புத்திமதி சொல்லும் இடத்தில், தியேட்டரே அதிர்கிறது.
பரத்தை மூச்சுக்கு முன்னூறு தரம், டாக்டர் மாப்ளே என்று அழைத்து இவர் கொண்டாடுவதும், நீங்களும் என்னை மன்னிக்கணும் என்று பரத் காலில் இவர் விழுவதும், தம்பிராமய்யா மிகச்சிறந்த குணச்சித்ர நடிகர் என்பதை நிரூபிக்கும் காட்சிகள்.

பரத்தின் நண்பராக கூடவே வரும் கருணாகரன், கூட்டணி சேர்ந்து கவிழ்க்க முயற்சிக்கும் படவா கோபி, தொழில் அதிபர் என்று பொய் சொல்லி தம்பிராமய்யாவின் மூத்த மகளை மணந்த சாம்ஸ் என தொடர் கலகலப்பூட்டுகிறது, சிரிப்பு பட்டாளம். 

நன்றி: www.dailythanthi.com
Tags: aintham thalaimurai siddha vaidhya sigamani cinema review, aintham thalaimurai siddha vaidhya sigamani story and direction review, Songs, comedy, screenplay, performance, music, song, climax review online, Read latest tamil movies reviews, Actor Bharath's 25th film, Nandita in the leading roles, Tamil comedy film written and directed by L. G. Ravichandar, release date August 2014, watch full movie in theater, aintham thalaimurai siddha vaidhya sigamani Fullmovie online, thirai vimarsanam, jokesஎனதருமை நேயர்களே இந்த 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News