கடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித்து சேதப்படுத்தும் சுறாக்கள் | Tamil247.info

கடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித்து சேதப்படுத்தும் சுறாக்கள்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
கடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித்து சேதப்படுத்தும் சுறாக்கள்: கவலையில் கூகுள்!
 
சுறாக்களுக்கு பயந்து கூகுள் நிறுவனம் கடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள்களை பாதுகாப்பான பொருள் கொண்டு கோட் செய்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள் கடலுக்கு அடியில் உள்ளன. அந்த கேபிள்களை பல ஆண்டுகளுக்கு முன்பு சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தின. இதையடுத்து சுறாக்கள் கூகுள் நிறுவனத்திற்கு தலைவலியாக மாறின. 
 
மேலும் கூகுள் கேபிள் வயர்களை சுறா மீன்கள் கடிப்பதாக அந்நிறுவனம் அண்மையில் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிதாக கடலுக்கு அடியில் பதிக்கப்படும் கேபிள்களை சுறாக்கள் கடிக்காத அளவுக்கு திடமான பொருள்களை கொண்டு தயாரித்துள்ளது. 
 
சுறா மீன்கள் ஏன் கேபிள் வயர்களை கடிக்கின்றன என்று நினைக்கிறீர்களா. கேபிள்களில் இருந்து வந்து மின்காந்த சக்தி சுறா மீன்களை ஈர்க்கின்றன. அதனால் அவை கேபிள்களை கடித்து சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது. 
 
Shark-attacks-google-undersea-telephone-cable
 
ஆனால் சுறா மீன் நிபுணர் ஒருவர் கூறுகையில், கேபிள் வயர்கள் என்ன வித்தியாசமாக உள்ளதே என்ற ஆர்வத்தால் அதை சுறாக்கள் கடிப்பதாக தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானை இணைக்கும் கேபிள்களை சுறா மீன்களிடம் பாதுகாக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.

Tags: #telephone cable, #shark attack #google telephone cable attack by shark #new coated cable to stop shark attack on underwater telephone (internet) cable, sura meengal thollai, cable kadithu kaali seiyum sura meen

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'கடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித்து சேதப்படுத்தும் சுறாக்கள்' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
கடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித்து சேதப்படுத்தும் சுறாக்கள்
Tamil Fire
5 of 5
கடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித்து சேதப்படுத்தும் சுறாக்கள்: கவலையில் கூகுள்!   சுறாக்களுக்கு பயந்து கூகுள் நிறுவனம...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News