சகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங்கும் புருனே மன்னர்? | Tamil247.info

சகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங்கும் புருனே மன்னர்?

சகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங்கும் புருனே மன்னர்?

சகாரா குழும நிறுவனங்களின் தலைவர் சுப்ரதாராய் டெபாசிட் தாரர்களிடம் ரூ. 20 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 5 மாதங்களாக இவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை ஜாமீனில் விடுவிக்க ரூ. 10 ஆயிரம் கோடி பிணைத்தொகை செலத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மிகப்பெரிய அளவிலான ஜாமீன் தொகையை செலுத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தனது ஓட்டல்களை விற்பனை செய்ய சுப்ரதாராய் முடிவு செய்தார்.

அதற்கான ஏற்பாடுகளை தனக்கு செய்து தருமாறூ சுப்ரீம் கோர்ட்டிடம் கோரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து அவர் அடைக்கப்பட்டிருக்கும் திகார் சிறையில் ஒருசிறப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இண்டர் நெட் மற்றும் காமிராவுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதில் இருந்த படியே அவர் ஓட்டல்கள் விற்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள அவரது 3 ஓட்டல்களும் பேசி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

Sahara hotels being bought by Purune king, Purune mannara sahara hotel kalai vilaikku vangugirar, anmaiu seidhigal, latest news in tamil, Sahara loss, sahara hotel sold to Burune, Sahara five star hotel sale, Pay 10000 core fine for sahara groups owner


 இந்த ஓட்டல்களை மிக அதிக விலைக்கு கேட்டு இருப்பது யார் என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. அவர் புருனே நாட்டின் மன்னர் சுல்தான் ஹசனால் போல்கியா ஆவார்.இவர் உலகிலேயே மிகப்பெரிய கோடீசுவரர். இவர் சுப்ரதாராய்க்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிளாசா மற்றும் டீரீம் ஹோட்டல், லண்டனில் உள்ள குரோஸ்வெனர் ஹவிஸ் ஆகிய 3 ஓட்டல்களை விலைக்கு வாங்குகிறார்.

இந்த 3 ஆடம்பர நட்சத்திர ஓட்டல்களையும் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு விலை பேசியுள்ளார். இவர் தவிர உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருந்து தயாரிப்பு கம்பெனியின் உரிமையாளர் சைரல் பூனவாலாவும் விலை பேசியுள்ளார். இவரும் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராவார். இவருக்கு லண்டனில் உள்ள குரோஸ்வெனர் ஹவுல் ஓட்டலில் மீது தான் பிரியம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள சகாரா நிறுவனத்தின் சொத்துக்கள் மீது அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் புருனே மன்னருக்கு சகாரா நிறுவனத்தின் 3 ஓட்டல்களை வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. இவர் தான் மிக அதிக விலைக்கு இந்த ஓட்டல்களை விலை பேசியுள்ளார். என் கூறப்படுகிறது.

அனால் புரூனே மன்னர் அதிகார வட்டம் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags: Sahara hotels being bought by Purune king, Purune mannara sahara hotel kalai vilaikku vangugirar, anmaiu seidhigal, latest news in tamil, Sahara loss, sahara hotel sold to Burune, Sahara five star hotel sale, Pay 10000 core fine for sahara groups owner

இந்த 'சகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங்கும் புருனே மன்னர்?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
சகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங்கும் புருனே மன்னர்?
Tamil Fire
5 of 5
சகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங்கும் புருனே மன்னர்? சகாரா குழும நிறுவனங்களின் தலைவர் சுப்ரதாராய் டெபாசிட் தாரர்களிடம் ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment