21 ஆகஸ்ட் 2014

, , ,

வீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டிய பெண்

மீரட்: நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல வேறு செய்திகளை படித்திருப்போம். அனால் இதற்க்கு விதிவிலக்காக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளம்பெண் ஒருவர் வீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களை எதிர்த்து போராடிய இந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் உ .பி., மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது ஒரு கார் மோதியது.

Meerut-brave-women-fights-with-youths-video
இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்து பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர். இந்நிலையில் உறவினர் தாக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுந்தாள். இளைஞர்களை பிடித்து பளார், பளார் அறை விட்டார். சட்டையை பிடித்து தர, தரவென கிழித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ஆளை விட்டால் போதும் என காரில் பறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Uttar Pradesh (Indian State),Meerut women fight,Meerut goondas,Meerut girl fight with five youngsters,girl fight,indian women fights,brave indian gilrs,Meerut fight videoஎனதருமை நேயர்களே இந்த 'வீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டிய பெண்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News