31 ஆகஸ்ட் 2014

, , ,

வேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடிகர் விவேக் பெருமிதம்

Actor vivek planting trees, Social service by actor vivek, Comedy actor vivek green globe, Maram valarppu, tamil news

முக்கூடல் அருகே உடையாம்புளியில் கிராம உதயம் மற்றும் விவேக்கின் கிரீன் குளோப் அமைப்புகளின் சார்பில் பசுமை கிராமம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் துவக்க விழா மற்றும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் விழா நடந்தது. நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கிராம உதயம் நிறுவனர் கோபாலசமுத்திரம் சுந்தரேசன் வரவேற்றார

விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நடிகர் விவேக் பேசுகையில், வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம். நாட்டை பசுமை ஆக்குவதே என் லட்சியம். இது வரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கிரீன்குளோப் அமைப்பினர் வழங்கியுள்ளனர். அரசும் எங்கள் அமைப்புக்கு உதவி செய்தால் இன்னும் பல லட்சம் மரக்கன்றுகளை வழங்கலாம்.
 
Actor vivek planting trees, Social service by actor vivek
வரும்போது அருகே கலியன்குளத்திற்கு சென்றேன். அங்குள்ள மக்கள் தாங்கள் அணிந்த வேஷ்டி, துணிகளை கொண்டு வேலி அமைத்து பல மரங்களை வளர்த்து வருகின்றனர். இது எனக்கு பெருமையாக உள்ளது. அந்த மக்களை பாராட்டுகிறேன் என்றார் விவேக். அவர் பேசுகையில், அங்கு நல்ல மழை பெய்தது. இதையடுத்து யாரும் போக வேண்டாம். நானும் உங்களுடன் மழையில் இருக்கிறேன் என்று கூறிய அவர் மழையில் நனைந்து கொண்டே பேசினார்.
 
Actor vivek planting trees, Social service by actor vivek, Comedy actor vivek green globe, Maram valarppu, comedy nadigar vivek maram nadum kaatchi,எனதருமை நேயர்களே இந்த 'வேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடிகர் விவேக் பெருமிதம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News