31 ஆகஸ்ட் 2014

, , , ,

மதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

Ultimate star Ajith poster in Madurai, Ajith poster, Tamil actor Ajith posters, Thala Ajith house bomb alert, Thala fans poster in madurai

மதுரை, ஆக. 31–

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரையில் அஜீத் ரசிகர்கள் சுவரொட்டி ஓட்டியுள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு நேற்று முன் தினம் பேசிய மர்ம ஆசாமி சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தான். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தினர் இதுகுறித்து சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சென்னை போலீசார் நடிகர் அஜீத் வீட்டுக்கு விரைந்து சென்று வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை நடத்தனர். சுமார் 1½ மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

Ultimate star ajith controversial poster, bomb alert to actor ajith, 108 ambulance received bomb alert in Actor Ajith house

இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி மதுரையில் அவரது ரசிகர்கள் கண்டன சுவரொட்டியை ஓட்டியுள்ளனர்.

சுவரொட்டியில் ‘‘வெடி குண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்! சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு, எங்க தலயை தொடணும்னா... எங்களை தாண்டி தொட்டுப்பாருங்கடா பார்ப்போம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் அஜீத் ரசிகர்கள் ஓட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

source: http://www.maalaimalar.com/

Ultimate star ajith controversial poster, bomb alert to actor ajith, 108 ambulance received bomb alert in Actor Ajith house, thala ajith fans poster in Madurai, Thala vettil vedukundu mirattal, rasigargal seetram, suvarotti, Madurai ajith rasigargal
எனதருமை நேயர்களே இந்த 'மதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News