18 ஜூலை 2014

, , , , ,

வேலையில்லா பட்டதாரி திரைவிமர்சனம்

வேலையில்லா பட்டதாரி திரைவிமர்சனம் | Velai illaa pattadhari cinema review online | 18th July 2014 release tamil movie velaiyillaa pattadhaari film review | Actor dhanush acting review | Actor dhanush performance in velaiyilla pattdhaari | velai illa pattdhari film story and songs review in tamil | latest tamil cinema reviewsவேலையில்லா பட்டதாரி.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல ஓப்பெனிங்கோட ஒரு படம்னா, இனிக்கு வந்துருக்குற வேலையில்லா பட்டதாரி படம் தாங்க… நச்சுன்னு நறுக்குன்னு படத்தப்பத்தி சொல்லனும்ன, நம்ம பக்கத்துக்கு வீட்டு பையன் மாதிரி ஒரு கேரக்ட்டர்ல தனுஷ் பக்காவா பிட் ஆயிருக்காரு. அப்பா கேரக்டருக்கு சமுத்திரக்கனி பர்பெக்ட். தமிழ் சினிமாவுக்கு புதுசா ஒரு புது அப்பா கிடைச்சுட்டாருன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பக்கா.

சும்மா பாட்டுக்கு பாட்டு தியேட்டர்ல விசில் பறக்குது. அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட் படமெல்லாம் ஓடுறது இல்லன்னு எல்லோரும் சொல்லிகிட்டு திரியுற இந்த நேரத்துல… அம்மா சென்டிமென்ட் எந்த அளவுக்கு ஒரு படத்தை தூக்கி நிறுத்தும்கிறதுக்கு விஐபி ஒரு சிறந்த உதாரணம்.

இந்த படத்துல தனுஷ் பெருசா அலட்டிக்காம எப்பவும் போல இந்த படத்துலயும் வராரு… “பத்து வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அதே மாதிரி தான் இப்பவும் இருக்கனு” சமுத்திரக்கனி சொல்ற டையலாக்குக்கு ஏத்த மாதிரி அப்புடியே தான் இன்னமும் இருக்காரு தனுஷ்.
அப்பாவும் பையனும் பேசுற ஒவ்வொரு வசனத்துக்கும், தனுஷ் பேசுற பஞ்ச்க்கும் தியேட்டர்ல விசில் பறக்குது. தனுஷுக்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமுன்னு தனுசே நினச்சுருக்க மாட்டாரு. சும்மா விசில் சத்தம் காத கிழிக்குது. இந்த படம் கண்டிப்பா தனுசுக்கு அடுத்த மைல் கல்லுன்னு சொல்லலாம்.

தமிழ் நாட்டுல ரஜினிக்கு அப்புறம் தம் அடிக்கிற சீன் தனுசுக்கு பக்காவா பிட் ஆயிருக்கு. தனுஷ் தம் அடிகிறத பாத்த எல்லோரும் தம் அடிக்கனும்னு தூண்டுற அளவுக்கு இருக்கு. எல்லோரும் தம் அடிக்குறத நிறுத்தசொல்லிட்டு இருக்கப்போ தனுஷ் தம் அடிக்குற சீன்ல நடிக்குறது வருத்ததை தரக்கூடிய விஷயம்.

வழக்கம் போல புரியாத மாதிரியே, ஆனா பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் பிடிச்ச மாதிரி மியூசிக் போட்டுருக்காரு அனிருத். மொத்தத்துல என்ன சொல்லவரேன்னு கேக்குறீங்களா..? படத்த கண்டிப்பா குடும்பத்தோட போய் பார்க்கலாம்.

தேவையான அளவு சென்டிமென்ட், தேவையான அளவு மசாலா, அளவான லவ், தேவையில்லாத சிக்ஸ் பேக் அப்புடின்னு பக்கா கமர்சியல் படம் இந்த வேலையில்லா பட்டதாரி.


Tags: வேலையில்லா பட்டதாரி திரைவிமர்சனம் | Velai illaa pattadhari cinema review online | 18th July 2014 release tamil movie velaiyillaa pattadhaari film review | Actor dhanush acting review | Actor dhanush performance in velaiyilla pattdhaari | velai illa pattdhari film story and songs review in tamil | latest tamil cinema reviewsஎனதருமை நேயர்களே இந்த 'வேலையில்லா பட்டதாரி திரைவிமர்சனம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News