22 ஜூலை 2014

, , ,

பார்வையற்ற மாணவர்கள் மீது பிரம்பால் கொடூர தாக்குதல் வெளியான வீடியோவால் பரபரப்பு..


Kakinada Green Field School Principal beats three blind students video,  cruel school principal beats his blind school students viral video, shocking video of a school teacher beating his students forcefully, Principal brutaly beats three blind students in Andhra Prades
ஐதராபாத்: ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில், 3 பார்வையற்ற மாணவர்களை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. இதனை பார்த்து ஆத்திரம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்டவர்களை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.  3 நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், ஆசிரியர் 3 பார்வையற்ற மாணவர்களை கதறக் கதற பிரம்பால் அடித்து நொறுக்குகிறார். வலி பொறுக்க முடியாமல் மாணவர்கள் துடிதுடித்து அலறுகிறார்கள். அவர்களில் ஒருவரை பிடித்து ஆசிரியர் தரையில் தூக்கி வீசுகிறார். இவ்வாறாக அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது. இந்த வீடியோ 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டாலும், நேற்றுதான் வெளியானது.

இதனை பார்த்தவர்களின் பலர் கடும் ஆத்திரம் அடைந்ததால், ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டது.இது குறித்து காக்கிநாடா போலீசார் கூறுகையில், பார்வையற்ற மாணவர்களை பிரம்பால் அடித்து நொறுக்குபவர், கிரீன்பீல்டு ரெசிடென்டல் என்ற பள்ளியை பார்வையற்ற மாணவர்களுக்காக நடத்தி வருகிறார். அவரை கைது செய்துள்ளோம். இந்த வீடியோ வெளியானதும், 2 நபர்களை பிடித்து பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அடி வாங்கிக் கொண்டிருந்த 2 நபர்களையும் கைது செய்தனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணையை தொடக்கி உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நிதியுதவி அளிப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. தொண்டு நிறுவனம் ஒன்று அந்த பள்ளியை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதில் 62 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவது குறித்து, மாவட்ட நிர்வாகம் முடிவு ஏதும் எடுக்கவில்லை. நேற்று வெளியான வீடியோ மற்றும் அதனை தொடர்ந்து நடந்த சம்பவங்களால் ஆந்திராவில் பரபரப்பு காணப்பட்டது.
Tags: Kakinada Green Field School Principal beats three blind students video, cruel school principal beats his blind school students viral video, shocking video of a school teacher beating his students forcefully, Principal brutaly beats three blind students in Andhra Pradeshஎனதருமை நேயர்களே இந்த 'பார்வையற்ற மாணவர்கள் மீது பிரம்பால் கொடூர தாக்குதல் வெளியான வீடியோவால் பரபரப்பு..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News