ரயில் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்! | Tamil247.info

ரயில் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
New website for online train ticket booking, irctc booking website www.nget.irctc.co.in, e-ticket website to speed up the ticket booking, irctc inaiyathala mugavari

ரயிலில் பயணம் செய்வதற்கான இ டிக்கெட் முன்பதிவை வேகமாக செய்வதற்கு வசதியாக புதிய இணைய தளம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. 

தற்போது இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) செய்து வருகிறது. www.irctic.co.in  என்ற அந்த இணைய தளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இ–டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக, பழைய இணைய தளமான www.irctic.co.in -க்கு பதிலாக, புதிய இணையதளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது. www.nget.irctc.co.in என்ற இந்த புதிய இணையதளத்தின் மூலம் வேகமாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டிசி.யின் பழைய இணைய தளத்தை பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய இணையதளம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.


Tags: New website for online train ticket booking, irctc booking website www.nget.irctc.co.in, e-ticket website to speed up the ticket booking, irctc inaiyathala mugavari.

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ரயில் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ரயில் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!
Tamil Fire
5 of 5
ரயிலில் பயணம் செய்வதற்கான இ டிக்கெட் முன்பதிவை வேகமாக செய்வதற்கு வசதியாக புதிய இணைய தளம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது.  ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News