10 மார்ச் 2014

,

ஒரு பெண்ணுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார் என் கணவர்... என்ன செய்வது..??

என் வயது 27; திருமணம் ஆகி, 11 ஆண்டுகள் ஆகின்றன. மூன் று பெண் குழந்தைகள் உள்ளனர். என் குடும்பமும், என் கணவர் குடும்பமும், மிக ஏழ்மையான குடும்பம். ஆனால், என் கணவர் குடும்பத்தினர், மிகவும் பந்தா செய்வர். ஒன்றும் இல்லா விட்டாலும், பிறரை மதிக்க மாட்டார்கள். என் கணவருக்கு, பல பெண்களுடன், ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, பல இடங்களில் அடி, உதையும் கிடைத்திருக்கிறது. அப்படியிருந்தும், என் கணவர் திருந்தவே இல்லை. இதை யெல்லாம் அறிந்திருந்தும், அவரோடு வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தேன்.

Dinamalar vaaramalar Anbudan andharangam | sagundhala badhilgal | mananalam | unmai kadhaigal | andharanga kelvi badhilgal in vaaramalar anbudan andharangamஎன் தந்தை வீட்டிற்கும் என்னால் செல்ல முடியவில்லை . திருமண வயதில், இரு தங் கைகள், ஒரு தம்பி உள்ள நிலையில், குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்படுகிறார் என் தந்தை. அவர்களுக்கு பாரமாக இருக்க, என் மனம் இட ம் தர வில்லை.

தற்சமயம், ஒரு பெண்ணுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார் என் கணவர். மாமனார், மாமியார் பணத்திற் காக எதையும் செய்யக் கூடியவர்கள்.ஒருமுறை, என் உணவில் மருந்தை கலந்து வைத்து விட்டனர். கடவுள் தான் என்னை காப்பாற்றி னார் என்று, சொல்ல வே ண்டும்.
மூன்று பெண் பிள்ளைகளுடன் செய்வதறியாது தவிக்கிறேன். என் பெற்றோர் வந்து தான், சில உதவிகள் செய்து விட்டு, ஆறுதல் கூறி சென்றுள்ளனர். என் பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவேன். இரண்டு பிள்ளைகள் படிக்கின்றனர்; வழியறியாமல் தவிக்கிறேன் . என் கணவர் திருந்த மாட்டாரா? மீண்டும் வந்தால், நான் எப்படி அவருடன் சேர்ந்து வாழ்வது? இப்படிப்பட்டவர்க ளை தண்டிக்க வழியே இல்லையா?
 
எனக்கு எந்த முடிவும் எடுக்க தெரியவில்லை; பிறந்த வீட்டுக்கும் செல்ல இயலவில்லை.
என் எதிர்கால வாழ்க்கைக்கு, ஒரு வழி காட்டும்படி கேட்டு கொள்கிறேன்.
- இப்படிக்கு
உங்கள் மகள்.

பிரியமான மகளே —
‘வேறு பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப் போய் விட்ட, என் கணவர் திருந்த மாட்டாரா, மனைவிக்கு துரோகம் செய்பவ ர்களை தண்டிக்க வழி இல்லையா…’ என்று, குமுறி குமுறி, நீ எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். உன் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உன் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்ப டையில் தெரிந்து கொண்ட பிரச்னைகள்… கணவர், பெண் பித்து பிடித்தவர். அதனால், சிலமுறை மற்றவர்களிடம் அடி, உதையும் வாங்கியிருக்கிறார். அவரின்குடும்பம் ஒரு,’பந்தா’ குடும்பம். பிறந்த வீட்டிலும் பிரச்னைகள். எந்த வழியிலும் உனக்கு, ஆறுதல் இல்லை.

எல்லா சுமைகளும் உன் மீது திணிக்கப்படுவதால், உனக்கு எரிச்சலாக இருக்கிறது. உன் மீதும், சமுதாயத்தின் மீதும் நம் பிக்கையில்லாததால், அதுவே உனக்கு அதிக மன அழுத்த த்தை தந்து கொண்டு இருக்கிறது.
பிள்ளைகளை காப்பாற்றும் பொறுப்பை நீ ஒருவளே ஏற்றுக் கொண்டிருக்கிறாய். கணவர் பக்கம் எந்தஉதவியும் இல்லை. மாறாக, திட்டும், அடியும், வீண்செலவும்தான். உன் மூன்று பெண் குழந்தைகளும் உன்னை அண்டி, உன் நிழலில் வள ர்ந்து வருகின்றனர்.

இச்சூழலில் நீ செய்ய வேண்டியது:
குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் நீ, எக்காரணத்தை கொண்டும் மனம் தளரக் கூடாது.

ஒருவேளை மனச்சோர்வு வந்தால், ‘என்னால் பிரச்னைக ளை இலகுவாக சமாளிக்க முடியும்!’ என்று, மனதிற்குள் திரு ம்ப திரும்ப சொல்லி, தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

உன் கல்வித் தகுதியை குறிப்பிடவில்லை. இருப்பினும், கூடி ய விரைவில், பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்ற பெண் ணாக நீ உருவாக வேண்டும். இது உனக்கும், பிற்காலத்தில் உன் பெண் குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும்.
நீ தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்துவதை, உன் பெண் குழந்தைகள் பார்க்கும் போது, அவர்களுக்கும் வாழ்க்கையி ன் மீது நம்பிக்கை வளரும்.

உன் கணவர், ‘நார்மல் செக்சில்’ திருப்திபடும் வகையை சேர் ந்தவராக தெரியவில்லை. அதீத காமத்தின் விளைவாக ஏற் படும் மன வியாதியின் ஆரம்பமாக இருக்கலாம். அதனால் தான் அதற்காக, அடி, உதை வாங்கினாலும், அதை பொருட் படுத்தாதவராக இருக்கிறார்.
அவரின் ஒத்துழைப்பின் தன்மைக்கு ஏற்ப, அவர் இப்பிரச் னையில் இருந்து விடுபடலாம். அது அவர் கையில்தான் இருக்கிறது. தேவையிருப்பின், மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று உதவி பெறலாம்.
உன் கணவர் வழியில் எந்த உதவியும் இல்லாத காரணத்தா ல், சிறிது காலம், உன் தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் செ ன்று வசிக்கலாம். இத்தகைய பிரிவு, உன் கணவரின் மனதை மாற்ற வாய்ப்பு ஏற்படும்.

இவ்வளவு விஷயங்களும் உன் குழந்தைகளுக்கு தெரியாம ல் இருப்பது நல்லது. தெரிய வந்தால், பிற்காலத்தில் அவர்க ளது மனநிலை பாதிக்கப்படும். குழந்தைகள் வளர்ந்த பின், அவர்களே பிரச்னைகளை புரிந்து கொள்ளும் நிலை வந்தவு டன், நடந்தவைகளை கூட்டியோ, குறைத்தோ சொல்லாம ல், அப்படியே சொன்னால் உன் குழந்தைககளுக்கு மற்றவர் கள் மீதும், சமுதாயத்தின்மீதும் ஏற்படும் வெறுப்பு குறையும்.

எப்படிப்பட்டவர்களையும் உண்மையான அன்பால் நல்வழிப் படுத்த முடியும். அன்பும், நம்பிக்கையும் வளரும். எனவே, உன் பெண் குழந்தைகளுக்கு நீயே அம்மையும், அப்பனுமாக இருக்க முயல வேண்டும்.

மகளே, உன் பிரச்னைகள் யாவும் நீங்கி உன் மனம் போல சுதந்திரமாக நீ வாழ, வாழ்த்துகிறேன்.
— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)

Dinamalar vaaramalar Anbudan andharangam | sagundhala badhilgal | mananalam | unmai kadhaigal | andharanga kelvi badhilgal in vaaramalar anbudan andharangam

Dinamalar vaaramalar Anbudan andharangam | sagundhala badhilgal | mananalam | unmai kadhaigal | andharanga kelvi badhilgal in vaaramalar anbudan andharangamஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு பெண்ணுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார் என் கணவர்... என்ன செய்வது..??' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News