10 மார்ச் 2014

, ,

இந்தியா வளர்ந்த வல்லரசு நாடா ..??? போப்பா .. இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைக்கு நாதியில்லை...

night shops in Bangalore | 24 beer shops in India | tea stall in night | Indian vallarasu naadu valarndha naadu | Araathu thoughts in tamil
இரவுகளில் கடைகளை திறந்து வைத்திருப்பதற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை. 
 
சிங்கப்பூர் , தாய்லாந்து நாடுகளை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். 24 மணி நேரமும் கடைகள் திறந்தே உள்ளன. 24 மணி நேரமும் பியர் கிடைக்கிறது. இதற்கே நம் நாட்டை விட அதிக அளவில் வெளி நாட்டு ஆட்கள் சுற்றும் நாடு, இரண்டுமே.

இங்கே இரவு 11 மணிக்கு மேல் தண்ணி பாட்டில் வாங்க கடையை தேட வேண்டியுள்ளது. டீக்கடைக்கு நாதியில்லை.5 ஸ்டார் ஹோட்டல் போனால் 150 ரூவா கொடுத்து 2 இட்லி சாப்பிடலாம்.

கடைகள் திறந்து இருந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது ஒரு பேச்சிக்கு உண்மை என்று எடுத்துக்கொண்டால் கூட , அப்படி கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. கடைகளை சாத்துவது அல்ல.

வெளிநாட்டில் இரவு 2 மணிக்கு தினமும் ஏதோ திருவிழா போல மக்கள் கூட்டம் பார் , ரெஸ்டாரெண்ட் , பீச் என அங்கும் இங்கும் மகிழ்ச்சியாக உலாவிக்கொண்டு இருக்கையில் , இங்கே மயான அமைதி.

வளர்ந்த நாடு , வல்லரசு என்பதெல்லாம் கோடிக்கணக்கில் ஆயுதம் வாங்கி எண்ணெய் போட்டுக்கொண்டு இருப்பதில் அல்ல. இரவு பதினோரு மணிக்கே அனைத்தையும் அடைத்து விட்டு தூங்குவதால் அல்ல. பாதுகாப்பான நாடு , கொண்டாட்டமான நாடு என்று பெயரெடுப்பதிலும் உள்ளது.

பெங்களூரில் வீகெண்டில் மட்டும் இரவு 1 மணி வரை பார் & பப் திறந்து வைத்துக்கொள்ள அரசு அனுமதி. இதனால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகாது. அதை கெடாம நாங்க பாத்துக்கறோம் என பெங்களூர் கமிஷனர் தில்லாக பேட்டி.

பெங்களூர் ஆல்வேஸ் ராக்ஸ் !

by Araathu அராத்து

night shops in Bangalore | 24 beer shops in India | tea stall in night | Indian vallarasu naadu valarndha naadu | Araathu thoughts in tamil

night shops in Bangalore | 24 beer shops in India | tea stall in night | Indian vallarasu naadu valarndha naadu | Araathu thoughts in tamilஎனதருமை நேயர்களே இந்த 'இந்தியா வளர்ந்த வல்லரசு நாடா ..??? போப்பா .. இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைக்கு நாதியில்லை... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News