31 மார்ச் 2014

உனக்கு என்ன தேவை..??

Tamil short stories, sirukadhai, thathuva kadhaigal, thevai enna kadhai, puthimadhi sollum kadhai
இந்தியாவை வென்ற அலெக்சாண்டர் தன் குருவின்ஆணைப்படிஞானி ஒருவரைப் பார்க்க வந்தார்.

"'யார்" என்று ஞானி கேட்க
''இந்தியா  முழுவதையும் வென்று  வந்த அலெக்சாண்டர் ,''என்றார்.
ஞானி சிரித்துக் கொண்டே தனது மான் தோலை அவரிடம் கொடுத்து அமர சொன்னார். மான் தோலை விரித்து  அமர்ந்த அவரை, ''எழுந்திரு,''என்றார் ஞானி.
அவர் எழுந்தவுடன் மான் தோல் மீண்டும் சுருண்டு கொண்டது. ஞானி, ''பார்த்தாயா? நீ விரித்து அமர்ந்தாய். நீ எழுந்தவுடன் அது சுருண்டு கொண்டது. நீ படையுடன் வந்தாய். நாடுகள் உனக்குப் பணிந்தன. நீ இங்கிருந்து போனதும் அவை பழையபடி நிமிர்ந்து விடும்.''என்றார். அலெக்சாண்டர் ஞானியைப் புதிராகப் பார்த்தார். ஞானி அன்புடன் கூறினார்,''அலெக்சாண்டர், நதி பிரவாகமாகப் பெருகி ஓடும். ஆனால் அதில் உனக்குத் தேவை ஒரு சிறிய அளவுதான்.கை நிறைய அள்ளிக்குடி. அதில் தவறில்லை. ஆனால் ஒட்டு மொத்த நதியும் உனது என்று சொந்தம் கொண்டாடாதே. பாத்திரம் நிறைய நீரை ஊற்றலாம் நிரம்பிய பின்னும் ஊற்றிக் கொண்டிருந்தால் நீர் வீணே கீழே வழிந்துதான் ஓடும். களஞ்சியம் முழுவதும் நெல் இருந்தாலும் நீ உண்ணப்போவது ஒரு பிடி தான். அரண்மனை முழுவதும் ஆடைகள் இருப்பினும் நீ அணியப் போவது ஒரு ஆடையைத்தான்.உலகம் முழுவதும் உன் வசம் இருந்தாலும் கடைசியில் நீ உறங்கப் போவது ஆறடியில்தான்.உன் கஜானா முழுவதும் தங்கம் நிரம்பி இருந்தாலும் அது உனைக் காப்பதில்லை.நீதான் அதைக் காக்கின்றாய்.''

Tags: Tamil short stories, sirukadhai, thathuva kadhaigal, thevai enna kadhai, puthimadhi sollum kadhaiஎனதருமை நேயர்களே இந்த 'உனக்கு என்ன தேவை..??' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News