24 மார்ச் 2014

, ,

எந்த வங்கியிலும் அக்கவ்ன்ட் இல்லை என்றாலும் ATM'மில் இருந்து பணம் எடுக்கும் புதிய வசதி..

bank of India new ATM money transfer technology, withdraw money without an account in bank, vangi kanakku illaamal pana edukkum pudhiya vasadhi in bank of india
பண பரிமாற்றத்தில் ஒரு புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..

நாம் நம்முடைய வங்கி கணக்கிலிருந்து ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால் அவரும் நமது வங்கியிலோ அல்லது வேறு ஏதாவதொரு வங்கியிலோ கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதுவரை இருந்துவந்த பண பரிமாற்ற நெறிமுறை. அனால் இந்த முறையில் வங்கி கணக்கு இல்லாத ஒரு நபருக்கு பணம் அனுப்ப இயலாது. நமது நாட்டில் இன்னும் நிறைய பேர் வங்கி கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டுமானால் வேறு ஏதாவதொரு வழிகளை நாடி செல்லவேண்டியுள்ளது.

தனது வாடிக்கையாளர்களின் குறைகளை அறிந்துகொண்ட பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தனது கணக்கிலிருந்து எந்த வங்கியிலும் கணக்கே இல்லாத ஒருவருக்கு பணம் அனுப்ப முடியும். பணம் பெற்றுகொள்பவர்களுக்கென புதிய ATM இயந்திரங்களை வைத்து வருகிறது பேங்க் ஆப் இந்தியா.

பணம் எடுப்பவர்கள் தனது மொபைல் நம்பரை பயன்படுத்தினாலே போதும். மேலும் சில பாதுகாப்பு குறியீடுகளை பணம் அனுப்புபவர் மற்றும் பெற்றுகொள்பவர்கள் உபயோகிக்க வேண்டும். இந்த தொழினுட்பத்தின் மூலம் ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.25000 மட்டுமே எடுக்க முடியும் என பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த தகவல படிச்சிட்டு மொபைல் நம்பார் இருக்கறவங்க எல்லாரும் போய் இயந்திரத்தை தட்டாதீங்க... போலீஸ் புடிச்சிட்டு போய்டும்..  !! 

http://www.tamil247.info/2014/03/Bank-of-India-new-atm-money-transfer-account-illaamal-ATMil-panam-edukkkalaam.html

bank of India new ATM money transfer technology, withdraw money without an account in bank, vangi kanakku illaamal pana edukkum pudhiya vasadhi in bank of india

bank of India new ATM money transfer technology, withdraw money without an account in bank, vangi kanakku illaamal pana edukkum pudhiya vasadhi in bank of indiaஎனதருமை நேயர்களே இந்த 'எந்த வங்கியிலும் அக்கவ்ன்ட் இல்லை என்றாலும் ATM'மில் இருந்து பணம் எடுக்கும் புதிய வசதி..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News