21 மார்ச் 2014

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?...


ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?


இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.
ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச்சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினாலும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.ரி.எம். உருவாக வித்திட்டது.
1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.ரி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.ரி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.ரி.எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்......

Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90