'தாமதமாகத் தூங்குபவர்கள்' புத்திசாலிகள்! | Tamil247.info

'தாமதமாகத் தூங்குபவர்கள்' புத்திசாலிகள்!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
vilithu-iruppavargale-puthisali, thoongaamal vilithu iruppavargal puthisaligal, pin thoongi pin eluvor puthisaaligal, aaraichi katturai solgiradhu சிலருக்கு, சீக்கிரம் உறங்கச் சென்று, காலையில் சீக்கிரம் எழுவது பிடிக்கும். சிலருக்கோ இரவில் வெகு நேரம் கண் விழித்திருந்துவிட்டு காலையில் தாமதமாக எழத்தான் பிடிக்கும். இந்த இரண்டு பிரிவினரில் சிறந்தவர்கள் யார் என்று கேட்டால், முதலாமவர்களைத்தான் கூறுவீர்கள்.

இதுவரை பொதுவாக அவர்களைத்தான் நல்ல பிள்ளைகள் என்று கூறிவந்திருக்கிறார்கள். ஆனால், இரவில் நீண்ட நேரம் கண் விழிக்கும் 'இரவுப் பறவைகள்', சீக்கிரமே தூங்கிவிடுபவர்களை விட புத்திசாலிகளாகத் திகழலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு. இதுதொடர்பான ஆய்வை மாட்ரிட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

அப்போது, இரவில் நீண்டநேரம் விழித்திருப்பவர்கள் நல்ல பிரகாசமாக இருப்பது தெரியவந்தது. அவர்கள் நல்ல வேலைகளிலும் இருந்தார்கள், அதிக வருவாய் ஈட்டினார்கள். காலையில் சீக்கிரமாக எழுபவர்கள், இரவுப் பறவைகளுக்கு இணையாக இல்லை என்றபோதும், பள்ளிகளில் நல்ல ரேங்க் பெற்றார்கள்.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 'ராக்கோழிகள்' முன்னிற்கிறார்கள். சீக்கிரமாகத் தூங்குபவர்கள், தாமதமாகத் தூங்குபவர்கள் ஆகிய இரு தரப்பினரிடமும் ஆய்வு மேற்கொண்டு, கிடைத்த முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தார்கள் ஆய்வாளர்கள். இந்த இரு வகையினரையும் அவர்களின் உடல் கடிகாரம்தான் அப்படி வைத்திருக்கிறது.

இரவில் விழித்திருப்பவர்களுக்கு இரவில்தான் அறிவு உச்சத்தில் இருக்கிறது. சீக்கிரம் விழிப்பவர்களுக்கு காலையில் அறிவுத்திறன் உச்சத்தில் இருக்கிறது. இந்த ஆய்வில் குறிப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட டீனேஜ் பருவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பல்வேறு வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பள்ளியில் அவர்களின் செயல்பாடு, இயல்பான அறிவுத்திறன் எல்லாமே அளவிடப்பட்டன. அப்போது இரவுப் பறவைகளுக்குத்தான் புத்திசாலித்தனம் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டது. 'அதிகாலைச் சேவல்கள்' அதிகம் பின்தங்கிவிட வில்லை என்றபோதும், அவர்கள் எதிர்த்தரப்பினரை விட அறிவில் கொஞ்சம் கம்மிதான் என்பது ஆய்வாளர்கள் கருத்து. காலையில் தாமதமாக எழுபவர்கள் இனி இதைச் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்!

Credits : maalaimalar .com

vilithu-iruppavargale-puthisali, thoongaamal vilithu iruppavargal puthisaligal, pin thoongi pin eluvor puthisaaligal, aaraichi katturai solgiradhu


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த ''தாமதமாகத் தூங்குபவர்கள்' புத்திசாலிகள்!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
'தாமதமாகத் தூங்குபவர்கள்' புத்திசாலிகள்!
Tamil Fire
5 of 5
சிலருக்கு, சீக்கிரம் உறங்கச் சென்று, காலையில் சீக்கிரம் எழுவது பிடிக்கும். சிலருக்கோ இரவில் வெகு நேரம் கண் விழித்திருந்துவிட்டு காலையில்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News