குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில | Tamil247.info

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!, Kulandhai valarppu muraigal, kulandhaigal munnaal seiyyakoodaadha sila, Payanulla kurippugal, thaimargal kavanikka vendiya kudrippu, petror kulandhai tips, tamil24x7, tamil247, tamil blogகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில!

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுதெரியக் கூடாது. அவர்கள்முன்னிலையில், சண்டையிட்டுக்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில்,பிறரை பற்றி தேவையில்லாமல்
விமர்சிக்காதீர்கள். உதாரணமாக,"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக
இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள்கணவரிடம் கேட்டதை நினைவில்
வைத்துக் கொண்ட குழந்தை, அவர்வரும் போது, "அம்மா கஞ்சன்
மாமா வந்து இருக்கிறார்'என்று சொல்ல நேரிடலாம்.

3. தீயசொற்களை பேசுவதை தவிருங்கள்.அதிலும் குழந்தைகள் முன்னிலையில்பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள்
பேசுவதை கவனித்து தான் உங்கள்குழந்தை பேசுகிறது என்பதை
நினைவிகொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும்போது, "கொன்னுடுவேன்,
தலையை திருகிடுவேன்,கையை உடைப்பேன்' போன்ற
வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சிலவிஷயங்களை தங்கள் கணவரிடம்
இருந்து மறைக்க விரும்புவர். எனவே,குழந்தைகளிடம்,
"அப்பாகிட்டே சொல்லிடாதே'என்று கூறுவர். அப்படி நீங்கள்
சொன்னால், உங்கள்குழந்தை தன்னை பெரிய ஆளாக
நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர்முன்னிலையிலேயே "அப்பாக்கிட்டசொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப்பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது.
"உங்க டீச்சருக்கு வேறவேலை இல்லை; உங்கடீச்சருக்கே ஒண்ணும் தெரியலே'போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது.
அப்படி கூறினால்,குழந்தைகள் அவர்கள் ஆசிரியர்மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து,அவர்கள் படிப்பை பாதிக்கவழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும்காசு கொடுத்துப் பழக்கக் கூடாது.
அதிலும் கமிஷன்கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப்போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால்,
உனக்கு சாக்லேட் வாங்ககாசு தருவேன்' என்பது போல
பேசுவதை தவிருங்கள்.இல்லாவிட்டால், நாளடைவில்
ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க
வேண்டும். நீங்கள் வாங்கும்புத்தகங்களும் தரமாக
இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப்
பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில்
தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில்குழந்தைகளைக் கண்டிக்கும் போது,
"பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும்."நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்;நன்றாக விளையாடு பெரிய
ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்'என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும்.
"நீ படிக்கிற படிப்புக்கு பியூன்வேலை கூட கிடைக்காது. இந்த மார்க்
வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்'என்றெல்லாம் பேசி,
பிஞ்சு மனதை வேதனை அடையசெய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள்கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள்சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது,புகையிலை போன்ற
செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!, Kulandhai valarppu muraigal, kulandhaigal munnaal seiyyakoodaadha sila, Payanulla kurippugal, thaimargal kavanikka vendiya kudrippu, petror kulandhai tips, tamil24x7, tamil247, tamil blog

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!, Kulandhai valarppu muraigal, kulandhaigal munnaal seiyyakoodaadha sila, Payanulla kurippugal, thaimargal kavanikka vendiya kudrippu, petror kulandhai tips, tamil24x7, tamil247, tamil blog

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில
Tamil Fire
5 of 5
குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத செயல்கள் சில! 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுதெரியக் கூடாது. அவர்கள்முன்னிலையில், சண்டையிட்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News