விழிப்புணர்வு: 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்ச் மேன் கற்பழிச்சிட்டானாம்..!! | Tamil247.info

விழிப்புணர்வு: 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்ச் மேன் கற்பழிச்சிட்டானாம்..!!

85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்ச் மேன் கற்பழிச்சிட்டானாம், karpalippai kuraikka vali, karpalippu kuttram thadukkum valimurai, nalla palakkam, nalla kudumbam karpalippai thadukkum, tamil24x7, tamil247, facebook.com/tamil24x7, tamil sindhanai, பழியுணர்ச்சி,ஆரோக்கியமான குடும்ப சூழலை,முறையான காமம் தான் நல்லது, vilippunarvu thagaval
“இன்னிக்கு பேப்பர்ல ஒரு நியூஸ்”

“என்ன?”

“வீட்டில் தனியாக இருந்த 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாச் மேன் கற்பழிச்சிட்டானாம..ராஸ்கல் இவனெல்லாம் என்ன பண்றது"

"ம்ம்"

“எனக்கு ஒரு விஷயம் சத்தியமா புரில…இதுக்கு காரணம் காமமா,பழியுணர்ச்சியா?”

“ரெண்டுமே இருக்கலாம்..ஆனாக் காமம் தான் மேலோங்கியக் காரணம்”

“எப்படி சொல்றே?”

“85 வயது கிழவியப் பழி வாங்கனும்னா கரண்டியால ரெண்டு தட்டு தட்டி அடிச்சு கூடப் பழி வாங்கலாம்”

“அட இத்தனை வயசான தளர்ந்து போனப் பெண் மணியைப் பார்த்தா எப்படிப்பா காமம் வரும் ?

“அஞ்சு வயசு சிறுமியப் பார்த்தா வருது,…அழுக்காக் குளிக்காம பரட்ட தலையோட நாத்தம் அடிச்சிகிட்டு அலையும் பிச்சைக் காரியப் பார்த்தா கூட வருது,, பர்தா போட்ட பொண்ண பார்த்தா வருது, …பனியன் போட்ட பொண்ணப் பார்த்தா வருது,..வயல் வெளில வேலை செய்யுற பொண்ணப் பார்த்தா வருது, ஏ சி ரூமில் வேலை பார்க்குற பொண்ணப் பார்த்தாலும் வருது ..அதுமாதிரி 90 வயசுக் கெழவியப் பார்த்தாக் கூட வருது..பொம்பளன்னு எழுதி இருக்குற பேப்பரப் பார்த்தாக் கூட வரும்.ஏன்னா இது மாதிரி ஆளுங்களுக்கு எப்பப் பார்த்தாலும் வருது..அதனால யாரப் பார்த்தாலும் வருது”

“அப்ப காமம் வர மற்றவர் உருவமோ,உடையோக் காரணம் இல்லையா?”

“சாதாரணமானவர்களுக்கு இல்லை ஆனா ஆனா எப்பப் பார்த்தாலும் இந்த காமக் குரோதத்துல உழல்றவங்களுக்கு ஆமாம் ”

“என்னப்பா சொல்றே..குழப்பறையே”

“பசிக்கு சாப்பிடறவர் ருசிய பார்க்க மாட்டார்கள்..உப்பு சப்பு இருக்கா ஊசி போச்சா இதெல்லாம் க்ரைடீரியாக் கிடையாது…அகோரப் பசில இருக்குறவன் குப்பைத் தொட்டில போட்ட எச்ச இலையக் கூட்த் திண்பான்..அது மாதிரி இந்த காமம் என்ற தீராப் பசில அலையறவங்க அஞ்சு வயசு சிறுமியையும் விட மாட்டாங்க ,அழுக்கு சுந்தரிகளையும் விட மாட்டாங்க..”

“அப்ப இது மாதிரி எண்ணங்கள் வராம இருக்க என்ன பண்ணனும்..?”

“ஒரு பாம்பு உன் வீட்டுக்குள்ள வந்தா என்ன பண்ணுவே..ஓடி ஒளிஞ்சுக்குவியா?இல்ல வீட்டுக்குளயே வர மாட்டியா?”

“அதெப்படி பா..அந்த பாம்பு எங்கே இருக்கு எந்த இட்த்துல படுத்துட்டு இருக்கு இல்ல படமெடுத்து இருக்குன்னு உத்து பார்த்து அதை வெளியேற்ற வழிய பார்க்கனுமே!”

“அப்படித்தான் இந்த எண்ணம் வரும் போது ஏன் வருது எதுக்கு வருது இதுலேர்ந்து எப்படி விடு படுவதுன்னு ன்னு அந்த ஆசையை உற்றுப் பார்த்து இது தேவையா தேவை இல்லையா இதானால் எனக்கு என்ன பிரச்சனை அடுத்தவருக்கு என்ன சங்கடம் ன்னு நினைத்தால் மட்டுமே இந்த காமக் குரோத்திலிருந்து விடுபட முடியும் ..இல்லையேல் எந்த தூக்கு தண்டனையும் சரி,சட்டமும் சரி, இவர்களைத் திருத்தவே முடியாது”

“அதான் பசங்களுக்கு சின்ன வயசுலேர்ந்தே கோவிலுக்கு போகக் கத்துக் கொடுக்கணும் ..சாமி பக்திய வர வழைக்கணும்..”

“அட கோவிலுக்கு போறவங்க தப்பு பண்றதில்லையா..இல்ல தப்பே பண்ணாதவர் தான் கோவிலுக்கு போறாங்களா?…நீ ஒன்னு..!.கற்பக் கிரக்த்துல நின்னு அர்ச்ச்ணை பண்றவங்களும், பாவ மன்னிப்பு தரவங்களும் தான் இந்த லீலைகளில் எக்ஸ்பெர்டா இருக்காங்க தெரியுமா?…ஶ்ரீ ராம் ஜெயம் எழுதுவதாலோ, குர்ரான் படிப்பதாலோ,சாமியாரிடம் சரணடைவதாலோ அல்லது பாதிரியாரிடம் செல்வதாலோ மட்டும் இந்த காமக் கிரோதத்திலிருந்து விடு பட முடியாது…இதெல்லாம் ஒரு எஸ்கேப்பிசம்..ஒண்ணும் வேலைக்காவாது..”

“அப்ப இதிலேர்ந்து எப்படி தப்பிப்பது?”

சின்ன வயதிலேர்ந்தே நல்ல எண்ணங்களை..சாத்வீக உணவுகளை, ஆரோக்கியமான குடும்ப சூழலை,நல்லக் கல்வியை ,நகைச்சுவையை,மனிதாபிமானத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்..காமமே இல்லாமவும் வாழ வேண்டும் என்றவசியம் இல்லை..முறையான காமம் தான் நல்லது என்ற படிப்பினையை ஒழுக்கத்தை ஆதியில் இருந்தே மனதில் விதைக்க வேண்டும்..அப்படி வளர்ந்தவர்கள் என்றும் இந்த காமத் தீயில் தன்னையும் எரித்து மற்றவர்களையும் காயப் படுத்த மாட்டார்கள் "


Author: Chelli Sreenivasan


85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்ச் மேன் கற்பழிச்சிட்டானாம், karpalippai kuraikka vali, karpalippu kuttram thadukkum valimurai, nalla palakkam, nalla kudumbam karpalippai thadukkum, tamil24x7, tamil247, facebook.com/tamil24x7, tamil sindhanai, பழியுணர்ச்சி,ஆரோக்கியமான குடும்ப சூழலை,முறையான காமம் தான் நல்லது, vilippunarvu thagaval

85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்ச் மேன் கற்பழிச்சிட்டானாம், karpalippai kuraikka vali, karpalippu kuttram thadukkum valimurai, nalla palakkam, nalla kudumbam karpalippai thadukkum, tamil24x7, tamil247, facebook.com/tamil24x7, tamil sindhanai, பழியுணர்ச்சி,ஆரோக்கியமான குடும்ப சூழலை,முறையான காமம் தான் நல்லது, vilippunarvu thagaval

இந்த 'விழிப்புணர்வு: 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்ச் மேன் கற்பழிச்சிட்டானாம்..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
விழிப்புணர்வு: 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாட்ச் மேன் கற்பழிச்சிட்டானாம்..!!
Tamil Fire
5 of 5
“இன்னிக்கு பேப்பர்ல ஒரு நியூஸ்” “என்ன?” “வீட்டில் தனியாக இருந்த 85 வயதான பெண்மனியை அந்த வீட்டு வாச் மேன் கற்பழிச்சிட்டானாம..ராஸ்கல் ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment