15 ஆகஸ்ட் 2013

, , ,

இதுதான் சுதந்திரம்


idhudhan sudhandhiram - இதுதான் சுதந்திரம் | India  Independence day | india sudhandhiram | www.facebook.com/tamil24x7 | tamil247.blog | tamil facebook posts இதுதான் சுதந்திரம்

* எல்லா கொடியேற்றங்களிலும் மயங்கி விழுகின்றது காலை உணவு கிட்டாத ஏதேனும் ஒரு குழந்தை
- இதுதான் சுதந்திரம்

* கம்பி வேலி கண்ணுக்கு எட்டவில்லை அவ்வளவு தான் - இதுதான் சுதந்திரம்

* பிரிச்சுக் குடுத்துட்டு அடிச்சுக்கிட்டு சாவுங்கடானு விட்டுட்டுப்போன பிரிட்டிஷ்காரங்களுக்கும் சொல்லலாம் 'தந்திர தின வாழ்த்துக்கள்'!
- இதுதான் சுதந்திரம்

* சுதந்திரம் வாங்கி தந்த பல சுதந்திர தியாகிகளில் ஒருவரைக்கூட சுதந்திர விழாவில் பார்க்க முடிவதில்லை. (அழைக்கப்படுவதில்லை என்பதே சரியானது) - இதுதான் சுதந்திரம்

* இன்னும், சுதந்திரத்தை அர்ஜூனும், விஜயகாந்தும் வாங்கித்தந்ததா நினைத்துக்கொண்டிருக்கின்றன சில சிறுசுகள் - இதுதான் சுதந்திரம்

* குண்டு துளைக்காத கூண்டில் சுதந்திரமாக கொண்டாடுகிறோம் சுதந்திரத்தை ( 'அச்சம் அச்சம் இல்லை' பாடல் நாபகம் வருகிறது )
- இதுதான் சுதந்திரம்

* மற்ற பண்டிகை போல சுதந்திர தினமும் வருஷா வருஷம் டேட் மாறி வந்தா நல்லா இருக்கும், 16 வந்துருக்கலாம் தொடர்ந்தாற்போல் 3 நாள் விடுமுறை கிடைத்திருக்கும் ( IT company employees ) - இதுதான் சுதந்திரம்

* என்று டிவியோடு கொண்டாடினோமோ அன்றோடு காணாமல் போனது சுதந்திர தினத்தின் பரவசமும்,கொடியேற்றத்தின் மேல் இருந்த ஈர்ப்பும் - இதுதான் சுதந்திரம்

* சில நேரங்களில் சுதந்திரம் பெண்களுக்கு பிறப்புரிமை இல்லை, அபார்ஷன் என்றே சொல்லலாம் - இதுதான் சுதந்திரம்

* 68 வது தடவையா கொடியேற்றும் இந்த நேரத்திலும், எங்கோ ஒரு மனிதன் மனிதக்கழிவை அள்ளிக் கொண்டுதான் இருக்கிறான் !
- இதுதான் சுதந்திரம்

* இரவில் வாங்கினோம், இன்னும் விடியவில்லை - இதுதான் சுதந்திரம்

கடைசியாய் என் கருத்து :

சுதந்திரத்தை கேட்காதே, எடுத்துக்கொள், அடுத்தவர்களிடம் கேட்கப்படும் சுதந்திரம் உனதாய் இருக்க முடியாது...!

- ஜெய்ஹிந்த் -

VIA - நண்டு க்பால் -

idhudhan sudhandhiram - இதுதான் சுதந்திரம் | India Independence day | india sudhandhiram | www.facebook.com/tamil24x7 | tamil247.blog | tamil facebook posts

idhudhan sudhandhiram - இதுதான் சுதந்திரம் | India Independence day | india sudhandhiram | www.facebook.com/tamil24x7 | tamil247.blog | tamil facebook postsஎனதருமை நேயர்களே இந்த ' இதுதான் சுதந்திரம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News