09 ஆகஸ்ட் 2013

,

திடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை

திடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை:

Fire baby in Tamilnadu திடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை, Taminadu news, rare news, baby fire, Fire baby in viluppuram thindivanam

விழு்பபுரம் மாவட்டம் பிரம்மதேசம் கண்ணன், ராஜேஸ்வரி தம்பதியினரின் ஆண் குழந்தை ராகுலின் உடல் தீப்பிடித்து எரிவதாக கூறப்படும் சம்பவத்தில் இன்று திண்டிவனம் டி.பரங்கனி கிராமத்தில் உள்ள ஆண் குழந்தை ராகுலை விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ”குழந்தையின் மருத்துவ செலவினை அரசே ஏற்கும்” என்றார்.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளான கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண்டு மாத கைக் குழந்தை உள்ளது.ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்த போது, இரண்டு மாத ஆண் குழந்தை திடீரென தீப்பிடித்து எரிந்தது.தீக்காயத்திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கியிருந்த போதும் இரண்டு முறை தீப்பிடித்துள்ளது.இந்நிலையில்
நேற்று முன்தினம் இரவு திண்டிவனம் அருகே உள்ள கர்ணனின் சொந்த ஊரான டி.பரங்கணியில் தங்கியிருந்த போதும், மர்மமான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்தது, வீடும் எரிந்துள்ளது.இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயன்றுள்ளார், பின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குழந்தை ராகுலை சிகிச்சைக்காக உப்பு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், இரண்டு மாத குழந்தைக்கு உடலில் பல்வேறு தீக்காயங்கள் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக்காயங்களும் சில நாட்களில் சரியாகி விடுகின்றன. இது புரியாத புதிராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தந்தை கர்ணன், குழந்தை பிறந்ததில் இருந்தே ஏதாவது ஒரு விபரீதம் நடந்து கொண்டு தான் உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம், குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என குழப்பமாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையிதான் .குழந்தை ராகுலை விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ”குழந்தையின் மருத்துவ செலவினை அரசே ஏற்கும்” என்றார்.

Fire baby in Tamilnadu திடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை, Taminadu news, rare news, baby fire, Fire baby in viluppuram thindivanam, thee patri eriyum kulandhai

Fire baby in Tamilnadu திடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை, Taminadu news, rare news, baby fire, Fire baby in viluppuram thindivanam, thee patri eriyum kulandhaiஎனதருமை நேயர்களே இந்த 'திடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News