18 ஜூன் 2013

, ,

முடியல!..இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!...

Tamil nadu police investigation joke | tamilga kaaval thurai pulanaivu joke | Read Tamil jokes | Tamilnadu police jokes | போலீஸின் புலனாய்வு

Tamil nadu police investigation joke | tamilga kaaval thurai pulanaivu joke | Read Tamil jokes | Tamilnadu police jokes | போலீஸின் புலனாய்வு
இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!

போலீஸின் பெருமை பேசுவதற்கு அடுத்து 'சிங்கம்-2’ வரவிருக்கிறது. இந்த நேரத்தில், நம்ம தமிழ்நாட்டு போலீஸாரின் உண்மையான 'புலனாய்வு’ அறிவுக்கு ஓர் அருமையான உதாரணம் இந்தச் சம்பவம்.


மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில், அன்று காலை முதல் ஒரே துர்நாற்றம். அதைக் கண்ட... இல்லை, நுகர்ந்த வழிப்போக்கர் ஒருவர் தன் புலனாய்வு அறிவைத் தட்டிவிட்டு, 'அருகில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்துதான் இந்த நாற்றம் கிளம்புகிறது’ என்று கண்டுபிடித்தார். உடனே மேலூர் போலீஸாருக்குத் தகவல் சொல்லிவிட்டு, மாயமாகிவிட்டார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம், இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டய்யா வரை அத்தனை பேரும் ஆஜர். தள்ளி நின்றபடி, ஒரு குச்சியால் மூட்டையின் வாயைத் திறந்த ஏட்டய்யா, பாடியை ஆய்வு செய்தார். 'அய்யா ஒரு ஆண் பிணம். வயசு 40,45 இருக்கும். நல்ல கலரு' என்றார். 'மூட்டை சின்னதா இருக்கிறதைப் பார்த்தா, ஆளைத் துண்டு துண்டா வெட்டியிருப்பாங்க போலத் தெரியுது' என்றார் தள்ளி நின்ற இன்ஸ்பெக்டர்.

அப்புறம் என்ன? எஸ்.பி. ஆபீசுக்குத் தகவல் சொல்லி, மதுரையில் இருந்து மோப்ப நாயும், தடயவியல் நிபுணரும் வரவழைக்கப்பட்டனர். உடல் 'டீகம்போஸ்’ ஆகிவிட்டதால், அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்ய வேண்டியது இருக்கலாம் என்று அரசு மருத்துவர்களையும் ஸ்பாட்டுக்கே வரவழைத்தார்கள் போலீஸார்.

இந்தச் செய்தி, செய்தி சேனல்கள் அனைத் திலும் ஸ்க்ரோலிங் நியூஸாக ஓடியது. மாலைப் பத்திரிகையிலும் 'சாக்கு மூட்டைக்குள் ஆண் பிணம்’ என்று பரபரப்பாக செய்தி வெளியானது. இதற்கிடையே, அந்த மூட்டையை நுகர்ந்து பார்த்த மோப்ப நாய் போலீஸாரைப் பார்த்து கோபமாகக் குரைக்க ஆரம்பித்தது. அதன் அர்த்தம் நாய் பயிற்சியாளருக்கே புரியவில்லை. துப்புரவுப் பணியாளர் களின் உதவியுடன் மூட்டையைப் பிரித்துப் பார்த்தால், உள்ளே இருந்தது... செத்த நாய். அதைப் பார்த்து, தடய நிபுணரும், அரசு டாக்டர்களும் போலீஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அசிங்கப்பட்டுப்போன இன்ஸ் பெக்டர், ஏட்டய்யாவைக் கூப்பிட்டு, 'ஒரு பாடி கிடக்குனு சொல்லியிருந் தாக்கூட பரவாயில்லை. 45 வயது மதிக்கத்தக்க ஆளுன்னு சொன்னியே எப்படிய்யா?' என்று 'கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி பரிதாபமாகக் கேட்டார். 'அது வந்து சார்... நாயோட முதுகு வளைஞ்சி, மண்டை மாதிரியே இருந்திருக்கு சார். முடி எல்லாம் உதிர்ந்ததும் வயசானவன் மண்டை மாதிரி இருந்துச்சி. பொதுவா 45 வயசுலதானே வழுக்கை விழும். அதை கால்குலேட் பண்ணிச் சொல்லிட்டேன்' என்றிருக்கிறார். 'எல்லாம் சரிய்யா... எதைப் பார்த்துய்யா ஆண் பிணம்னு உறுதியாச் சொன்னே?' என்று மீண்டும் கேட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்கு வெட்கப்பட்டுக்கொண்டே அந்த ஏட்டு சொன்ன பதில், 'சார் பொம்பளைக்கு வழுக்கை விழாதுல்ல'. கடுப்பான இன்ஸ்பெக்டர், 'உன் புலனாய்வுத் திறமையில இடி விழ' என்று சபித்துவிட்டுப் போய்விட்டார்.

இந்தத் தகவல் டி.எஸ்.பி-யின் காதுகளை எட்ட, 'இவ்வளவு வேகமா விசாரணையை முடிச்ச நீங்க, அப்படியே சந்தேக மரணம் அல்லது கொலைனு ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு பண்ணியிருக்கலாமே?...' என்று பல்லைக் கடித்துக்கொண்டு 'பாராட்டி’யிருக்கிறார். அதற்கு போலீஸார் சொன்ன பதில், 'சார், இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. அந்த நாயோட உடம்புல இருக்கிற காயத்தைப் பார்த்தா, அதை வெட்டித்தான் கொன்னுருக்காங்கனு தெளிவாத் தெரியுது. அது யாரோட நாய்னு கண்டுபிடிச்சா, அந்த வீட்டுல கொள்ளை எதுவும் நடந்திருக்கானு கண்டுபிடிச்சிடலாம்' என்றிருக்கிறார்கள்.

முடியல!

by Rajesh Vaithi Tamil nadu police investigation joke | tamilga kaaval thurai pulanaivu joke | Read Tamil jokes | Tamilnadu police jokes | போலீஸின் புலனாய்வுஎனதருமை நேயர்களே இந்த 'முடியல!..இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News