உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே - நகைச்சுவை சிறுகதை | Tamil247.info

உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே - நகைச்சுவை சிறுகதை

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

tamil short stories, tamil sirukadhai, nagaichuvai thoguppu , broiler koli pannai

உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே - நகைச்சுவை சிறுகதை, tamil short stories, tamil sirukadhai

ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.

உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர்.. பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார்.



வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம்.
நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்..

பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை.

ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிறமாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார்.

வந்தவர்கள் நாங்கள் ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம்.. நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர்.

பண்ணையார் நிலைமை கேட்கணுமா?

என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க... என்றிருந்த நிலையில்... மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர்.

பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒருஅனா கொடுத்துடுறேன்.அதுங்க எதையோ வாங்கித்தின்னுட்டு வந்திடுது.. என்னா திங்குதுனு எனக்குத் தெறியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார்... tamil short stories, tamil sirukadhai, nagaichuvai thoguppu , broiler koli pannai
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே - நகைச்சுவை சிறுகதை ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே - நகைச்சுவை சிறுகதை
Tamil Fire
5 of 5
tamil short stories, tamil sirukadhai, nagaichuvai thoguppu , broiler koli pannai ஒரு கோழிப்பண...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News