சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ? | Tamil247.info

சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Major Sandeep Unnikrishnan | Sandeep Unnikrishnan in Indian Army | Sandeep Unnikrishnan killed in Mumbai attack | Unnikrishnan had joined the National Defence Academy (NDA), Pune in 1995 | எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் " சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்".

 Major Sandeep Unnikrishnan | Sandeep Unnikrishnan in Indian Army | Sandeep Unnikrishnan killed in Mumbai attack | Unnikrishnan had joined the National Defence Academy (NDA), Pune in 1995 | எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்

சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?

சந்தீப் பூனேயில் உள்ள 'நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில்' பயிற்சி பெற்றார். அதன் பின்னர் பீஹார் ரெஜிமென்டில் பணியாற்றிய சந்தீப், இந்திய இராணுவத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பில் திறம்பட பணியாற்றினார். பின்னர். "நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸ்" எனப்படும் சிறப்பு பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடிந்தபின், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் சிறப்பு அதிரடி படையின் பல கடுமையான, துணிச்சலான, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். கார்கில் போரிலும், பல மோதல்களில், தன்னை நாட்டுக்காக ஈடுபடுத்திக் கொண்ட பெருமையை உடையவர் மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன்.


 Major Sandeep Unnikrishnan | Sandeep Unnikrishnan in Indian Army | Sandeep Unnikrishnan killed in Mumbai attack | Unnikrishnan had joined the National Defence Academy (NDA), Pune in 1995 | எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்

பம்பாய் தாஜ் ஓட்டலுக்கு, அழிவு நாடான பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், அப்பாவி மக்களை பினைக் கைதிக‌ளாக வைத்துக் கொண்டு, தங்கள் வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அதிலிருந்து அந்த பினைக் கைதிகளையும், இந்த தேசத்தின் மானத்தையும் காப்பாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்கள், "ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப்" எனப்படும் "சிறப்பு அதிரடை படையினர். அந்த சிறப்பு அதிரடிப் படையினர், மக்களை மீட்பதற்காகவும், தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் "ஆப்பரேஷன் ப்ளாக் டோர்னேடோ" என்று அழைக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தை நடத்தினர். அந்த அதிரடைப் படைக்கு தலைமை தாங்கியவர்தான் 31 வயதே ஆன, சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்.

26, நவம்பர் 2008 நள்ளிரவில், தாஜ் மஹால் ஹோட்டலை தீவிரவாதிகள் ஊடுறுவி, பல அப்பாவி மக்களை கேடயமாக வைத்துக் கொண்டும் நாசச் செயல் புரிந்துக் கொண்டு இருக்கையில், ஸ்பெஷல் ஆக்ஷன் க்ரூப் வரவழைக்கப்பட்டது.
பயங்கரமான் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுக‌ளோடும், நவீன ரக துப்பாக்களோடும் கொலை வெறி தாண்டவம் புரிந்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள். மேஜர் சந்தீப்பும் அவரின் குழுவினரும் ஆறாவது மாடியை படிகட்டுகள் வழியாக நெருங்கிவிட்டிருந்த வேளையில், கீழே மூன்றாவது தளத்தில் தீவிரவாதிகள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. தீவிரவாதிகள் சில பெண்களை பினைக்கைதிகளாக ஒரு அறையில் உள் வைத்து உட்புறமாக பூட்டிக் கொண்டிருந்தனர். அதை அவர்கள் நெருங்கிய வேளையில், தீவிரவாதிகளின் திடீர் தொடர் துப்பாக்கி வெடியில் கமேண்டோ "சுனில் யாதவ்" காயமுற்றார். மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன் தன் கூட்டத்தை பின் செல்லுமாறு பணித்து, தான் முன் சென்று தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டார். இப்படி அவர் செய்ததன் மூலமாக காலில் காயமுற்ற சுனில் யாதவை காப்பாற்றி மீட்க முடிந்தது. அவரின் ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் மற்றொரு தளத்திற்கு தப்பித்து ஓடினர். Major Sandeep Unnikrishnan | Sandeep Unnikrishnan in Indian Army | Sandeep Unnikrishnan killed in Mumbai attack | Unnikrishnan had joined the National Defence Academy (NDA), Pune in 1995 | எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள்

தன்னந்தனியாக அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியவாறு சென்ற மேஜர் சந்தீப், பின் பக்கத்திலிருந்து வந்த தாக்குதலால், படுகாயமடைந்தார். அவரின் உயிர் பாரத‌ மண்ணுக்காக வீழ்ந்தது. அவரின் உடல் விதைக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளில், பொறுக்கி எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது பத்து தீவிரவாதிகள். அவர்க‌ளில் நால்வர் தாஜ் ஹோட்டலில் அழிக்கப்பட்டனர். 300 மக்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பல வெளிநாட்டு தலைவர்களும் அடங்குவார்கள்.

கடைசியாக மேஜர் சந்தீப் உண்ணிக்கிருஷ்ணன் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் யாரும் வராதீர்கள், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன்" (Don’t come up, I will handle them) என்பதுதான். இந்த தாக்குதலில் அவரோடு கஜேந்திர சிங் என்ற மற்றொரு இந்திய வீரரும் உயிரை நாட்டுக்கு அர்பித்தார்.

நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இளமையை, வாழ்வை, உயிரை அர்ப்பனித்த இத்தகைய மாவீரர்களை இந்திய குடிமகன்களாகிய நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த‌ வேண்டும். இவர்களின் தியாகத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்காக, நம் பாதுகாப்புக்காக, எங்கோ எல்லையில் மடிகிறானே முகம் தெரியாத‌ ஒரு இராணுவ வீரன் அவனை என்று இந்த தேசம் உரிய முறையில் எண்ணிப் பார்க்கிறதோ, அன்று இந்த தேசம் உயரும்.

ஜெய் ஹிந்த்

Major Sandeep Unnikrishnan | Sandeep Unnikrishnan in Indian Army | Sandeep Unnikrishnan killed in Mumbai attack | Unnikrishnan had joined the National Defence Academy (NDA), Pune in 1995 | எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் " சந்தீப் உண்ணிக் கிருஷ்ணன்".
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், "சந்தீப் உண்ணிக் கிருஷ்ணனை" எத்தனை பேருக்கு தெரியும் ?
Tamil Fire
5 of 5
Major Sandeep Unnikrishnan | Sandeep Unnikrishnan in Indian Army | Sandeep Unnikrishnan killed in Mumbai attack | Unnikrishnan had joined ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News