18 மே 2013

,

தன்னம்பிக்கை வரிகள்!

தன்னம்பிக்கை வரிகள்!
*********************

ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும்.

புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான்.

சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும்,ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும்.

உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன்.
உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம்.

ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும்.

பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது,பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாவே இருக்கும்.

ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும்போது அங்கு அமைதி விலகி சென்று விடும்.

முட்டாளின் தோழமையை விட,ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்-புத்தர்

வறுமையினால் பெரிய துன்பம் இல்லை,செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை-கதே

உழைப்பை மட்டும் விற்கலாம்,ஒரு நாளும் ஆன்மாவை விற்க முடியாது-ரஸ்கின்.

மவுனம் என்னும் மரத்தில்,அமைதி என்னும் கனி தொங்குகிறது.- டெஸ்கார்டில்.

பழிவாங்குதல் என்பது அற்பர்கள்,அற்ப ஆனந்தம் கானும் செயலாகும்.
சிறப்பு என்பது பலத்தை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.

ஒவ்வொரு நாள் காலையும்,அந்த நாளை நல்ல நாளாக ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது.

எல்லா நேரமும் நல்ல நேரம்தான்,அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பதுதான் கேள்வி.

மூளையால் சிந்திப்பவன் பாதி மனிதனே,இதயத்தால் சிந்திப்பவனே முழு மனிதன்.

செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்,குணத்தை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும்.
எனதருமை நேயர்களே இந்த 'தன்னம்பிக்கை வரிகள்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News