27 ஏப்ரல் 2013

, , , , , ,

குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும்...

New york Bronx apartment Fire accident Mom holding her child outside of the window World best pics | Humanity | குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும்

New york Bronx apartment Fire accident Mom holding her child outside of the window  World best pics | Humanity | குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும்

உலகை உலுக்கிய புகைப்படம் - 1
******************************
ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ?

# 2010 பிப்ரவரி மாதம். நியூயார்க்கில் உள்ள Bronx apartment என்னும் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்துவிட்டு. அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரே புகை மண்டலம். எல்லோருக்கும் மூச்சுத்திணறல். இன்னொரு பகுதியில் தீ பரவத்தொடங்கியது. மனித மூளை மழுங்கும் சமயம் இது. இந்த நேரத்தில் நாம் என்ன செய்திருப்போம் ? என்ன செய்வதென்று தெரியாமல் கூச்சல் போடுவோம்.

ஆனால் படத்தில் இருக்கும் 18 வயது பெண் Vanessa Scott என்ன செய்தார் தெரியுமா ? வீட்டில் இருந்த Zaniwah Alexandra என்னும் 7 மாத சொந்தக்கார பெண் குழந்தையை ஜன்னல் இடுக்கின் வழியே வெளியே அந்தரத்தில் தொங்கவிட்டு கையால் பிடித்துக்கொண்டிருந்தார். ஏன் ?

"உள்ளே மூச்சுவிட முடியவில்லை. தீ பரவத்தொடங்கியது.புகையால் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும் என ஜன்னல் வழியே குழந்தையை காற்றில் தொங்கவிட்டு பிடித்துக்கொண்டிருந்தேன் " என அவர் கூறுகிறார்.

தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

New york Bronx apartment Fire accident Mom holding her child outside of the window World best pics | Humanity | குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும்எனதருமை நேயர்களே இந்த 'குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News