கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர் | Tamil247.info

கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

indian stuntman sailendra nath roy dies trying to cross a river on a zip wire using his ponytail கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர் சைலேந்திர ராய்

indian stuntman sailendra nath roy dies trying to cross a river on a zip wire using his ponytail கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர் சைலேந்திர ராய்
கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர்(வீடியோ இணைப்பு)

உலக கின்னஸ் சாதனைக்காக தலைமுடியில் தொங்கியபடி ஆற்றின் குறுக்கே கயிறு மூலமாக கடக்க முயன்றவர் நடுவழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சைலேந்திர ராய்(45) என்பவர் வித்தியாசமாக எதையாவது செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். சிறந்த சுற்றுலா தலமான டார்ஜிலிங்கில் உள்ள மலைப்பாதை ரயிலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமுடியால் இழுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.

மேலும் நேற்று சிலிகுரி அருகே தீஸ்தா ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அதில் தலைமுடியில் தொங்கியபடி ஆற்றை கடக்க முயன்றார். இவரது சாதனை முயற்சியை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் கயிறு கட்டப்பட்டது.

கயிற்றின் மீது கிணறுகளில் நீர் எடுக்க பயன்படும் சகடை சக்கரத்தை கட்டி அதில் தனது முடியை கட்டிக் கொண்டார். சக்கரத்தை தனது உடல் அசைவால் நகர்த்தி ஆற்றை கடக்க முயன்றார். பாதி தூரம் சென்றதும் ராட்டினம் கயிற்றில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் அது நகரவில்லை.

ராய் எவ்வளவு முயற்சித்தும் சிக்கலில் இருந்து விடுபடவில்லை. கரையில் இருந்த மக்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. யாராலும் உதவ முடியவில்லை.

சிறிது நேரம் சென்றதும் ராயின் கை கால் அசைவுகள் திடீரென நின்றது. விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த மக்கள் கயிறை பிடித்து கரைக்கு இழுத்தனர். ராய் மூர்ச்சையற்று கிடந்தார். அவரை சோதித்த டொக்டர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேடிக்கை பார்க்க வந்த மக்கள், ரசிகர்கள், கின்னஸ் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் சாதனையாளர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


indian stuntman sailendra nath roy dies trying to cross a river on a zip wire using his ponytail கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர் சைலேந்திர ராய்


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர்
Tamil Fire
5 of 5
indian stuntman sailendra nath roy dies trying to cross a river on a zip wire using his ponytail கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News