25 ஏப்ரல் 2013

, , ,

முதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன செய்வது?

First aid for fire accident skin burn | apply water on skin | cool burning skin | தீ விபத்து முதலுதவி

விபத்து நடந்த இடத்தில் யாருக்காவது தீ(body fire) பிடித்துக்கொண்டால், முடிந்தவரை தண்ணீர் ஊற்றி அணையுங்கள்.

First aid for fire accident skin burn | apply water on skin | cool burning skin | தீ விபத்து முதலுதவிசாக்குப்பையை சுற்றுவதெல்லாம் மிக மிக கொடூரமான தீயணைக்கும் முறை. ஏதாவது பொருள் தீப்பிடித்துக்கொண்டால் அதை அணைகக சாக்குப்பையை பயன்படுத்தலாம்.

ஆனால் மனிதன் மீது தீப்பிடிக்கும்போது(fire accident) தண்ணீரே சிறந்த மருந்து. தவறிப்போயும். மணலையெல்லாம் போட்டு அணைக்க முயன்று விடாதீர்கள். அது நாமே அவரை கொலை செய்வது போல ஆகும்.

ஒரு வேளை தீ தானே அணைந்துவிட்டாலும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் மீது தண்ணீரை ஊற்றுங்கள் .
காரணம் வெந்த புண்ணிற்கு(burned skin) குளிர்ச்சி அப்போது மிக அவசியம். அப்போது நாம் ஊற்றாமல் போகும் தண்ணீர் அவரின் உயிரை எடுத்து விடலாம்.


வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு:

வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க(First aid:cool burned skin) வேண்டும்.

முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.

உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்.

உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது. கூடுமானவரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
  
By டாக்டர். செந்தில் வசந்த்!

First aid for fire accident skin burn | apply water on skin | cool burning skin | First aid tips | Health tips | தீ விபத்து முதலுதவி | Fire Safety | Consult doctor for severe skin burning
எனதருமை நேயர்களே இந்த 'முதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன செய்வது? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News