23 ஏப்ரல் 2013

,

வியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி?

Body sweating bad smell removal tips | why sweat smells bad | sweating foul smell | வியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி | வியர்வை நாற்றம் வீச காரணம் என்ன | Health Tips | தெரிந்து கொள்ளுங்கள் | ஹெல்த் டிப்ஸ்

நம்மை சுற்றியுள்ள இடமும் சரி, சுற்றியுள்ள மனிதர்களும் சரி, தூய்மையாக இருந்தால் அந்த இடத்தையும், மனிதர்களையும் விட்டு நாம் விலகிப்போக விரும்பமாட்டோம்.
Body sweating bad smell removal tips | why sweat smells bad | sweating foul smell | வியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி | வியர்வை நாற்றம் வீச காரணம் என்ன | Health Tips | தெரிந்து கொள்ளுங்கள் | ஹெல்த் டிப்ஸ்

Body sweating bad smell removal tips


என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும் மிக வேண்டியவனாக இருந்தாலும் அவனிடம் கெட்ட வாடை வீசினால் நெருங்கிப்பழக நம் மனம் இடம் தருவதில்லை.

ஆகவே மக்களை கவர்ந்து இழுக்க நல்ல குணம் இருந்துவிட்டால் மட்டும் போதாது, நல்ல  உடல் வாடையும் நம்மை சுற்றி வீச வேண்டும்.

மனிதன் நெருங்கிப்பழக தடையாக இருப்பது வாய் நாற்றமும் வியர்வை நாற்றமும் என்பதை எவரும் ஒப்புகொள்வர்.

கெட்ட வாடை காரணமாக கணவன் மனைவி நல்லுறவும் பாதிக்கப்படுகின்றன. அகவே மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்களில் உடல் தூய்மையும் ஒன்று.

உடல் நாற்றத்திற்கு காரணம் குடல் நாற்றம் குடல் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும்.

அகவே இதற்க்கு மலச்சிக்கல்(constipation) ஒரு காரணம். மலச்சிக்கல் உள்ளவர்கள் உடம்பில் வரும் வியர்வை நாற்றமடிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


வியர்வை நம் உடலுக்கு நன்மை செய்வதர்க்காகவே அமைந்த ஒரு நல்ல திரவம். தினசரி 24 மணி நேரத்தில் சுமார் 75 அவுன்ஸ் தண்ணீர் நம் உடலை விட்டு வியர்வையாக வெளியேறுகிறது. உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்த   இன்றியமையாதது.நம் உடலில் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள்(Sweating Glands) இருக்கிறது.
அவை எக்கிரைன்(eccrine glands) மற்றும் அப்போக்ரைன்(apocrine glands) ஆகும்.

உள்ளங்கை உள்ளங்கால் முதல் உடல் முழுவதும் எக்கிரைன் சுரப்பிகள் வியர்வையை உற்பத்தி செய்கின்றன. இதில் சோடியம் குளோரைடு, யூரியா உப்புக்கள் உள்ளன.

இரண்டாவது வகையான அப்போக்ரைனுக்கு தனி மனம் உண்டு.

மார்பு, அக்குள், தொடை இடுக்குகள், ஆகிய இடங்களில் இவை சுரந்து ஒருவித வாடையை வீச செய்கிறது.


இது பாலுணர்வை தூண்டக்கூடியது என்ற ரகசியத்தையும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் உடம்பில் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம் என்ற அமைப்பு உள்ளது. இவை வியர்வை சுரப்பிகளைத் தூண்டிவிட்டு வியர்வையை அதிகமாக வெளியேற்றுகிறது.

பயம், கவலை, கடுமையான உழைப்பு இந்த நேரங்களில் உள்ளங்கை உள்ளங்கால் பகுதியில் வியர்வை சிலருக்கு அதிகமாக சுரக்கிறது.

வியர்வை திரவத்தில் நாற்றம் வீச காரணம் என்ன?.

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

வியர்வை புளித்துப் போவதால் நாற்றம் அடிக்கிறது. கிருமி தோற்று ஏற்பட்டால் வியர்வை நாறுகிறது. வியர்வை ரசாயன மாறுதல் ஏற்பட்டால் நாற்றம் வீசுகிறது.

சில வகை உணவுகளும், நோய் தீர்க்கும் மருந்துகளும் வியர்வையை நாற்றமடைய செய்கின்றன.

குளிக்காத காரணத்தால் வியர்வை அழுக்குகள்   உடம்பில் படிந்து நாற்றமடிக்கின்றன.

வியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி?

முதலில் மலச்சிக்கலை(constipation) போக்க வேண்டும், இரண்டாவது வெயில் நாட்களில் தினசரி இரண்டு வேலை குளிக்க(bath) வேண்டும்.

உடுத்தும் ஆடைகளை திரும்ப திரும்ப உடுத்த கூடாது. துவைத்து பயன்படுத்த வேண்டும்.

காரமான சோப்புகளை(soap) அடிக்கடி அதிகம் உபயோகிக்க கூடாது. இது உடலின் தோலில் உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.

மூலிகைகள் கலந்த சோப்பை(Natural Soap) உபயோகிக்க வேண்டும்.

உடலில் வேண்டாத பகுதிகளில் அடர்த்தியான ரோமங்கள்(Hair) இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிலருக்கு வியர்வை கற்றாளை நாற்றம்(bad smell) வீசும் இது வியர்வையில் உள்ள சில நுண்ணியிரிகளால்(bacterias) ஏற்படுகிறது. இந்த நுண்ணியிரிகள் வியர்வையில் ரசாயன மாற்றத்தை உண்டாக்கி மஞ்சளாகவும், பச்சையாகவும், நீல நிற மாற்றத்தையும்   உண்டாக்கும். ஆகவே நுண்ணியிர் கிருமிகளை ஒழிக்க வேண்டும் அப்பொழுதுதான் நாற்றம் ஒழியும்.

இதற்க்கு படிகாரம் கரைத்த நீரில் வியர்வை நிறைந்த பகுதிகளை கழுவ வேண்டும். வியர்வையை கட்டு படுத்த சாலிசிலிக் அசிட், போரிக் பவுடர், டால்கம்  பவுடர் கலந்த கலவையை உடம்பில் தடவி வந்தால் வியர்வை அடங்கும்.

கமுக்கட்டு போன்ற மறைவிடங்களில் 5% படிகார நீர், 70% மெடிக்கல் ஆல்கஹால் கலந்து தேய்க்கலாம்.

மூலிகை குளியலும் சிறந்தது அதாவது ஒரு பக்கெட் தண்ணீரில் வேப்ப இலை, தும்பை செடி இலை, நன்னாரி வேர், வெட்டி வேர் போட்டு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இந்த மூலிகை தண்ணீரில் குளித்து வந்தால் நாற்றம் பறந்துவிடும்.

ஆசிரியர் அன்புதாசன்

Body sweating bad smell removal tips | why sweat smells bad | sweating foul smell | வியர்வை நாற்றம் | Health Tips | தெரிந்து கொள்ளுங்கள் | ஹெல்த் டிப்ஸ் | excess sweating | Sweating Palms | Armpit Sweat | Underarm Sweating Cure | Prevent Sweating| Excessive Sweat | body smell cure | body sweat cure | natural cure | வியர்வை நாற்றம் போக| வியர்வை நாற்றம் நீங்க| வியர்வை குறைய
எனதருமை நேயர்களே இந்த 'வியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News