தெரிந்து கொள்ளுங்கள்!.. | Tamil247.info

தெரிந்து கொள்ளுங்கள்!..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Tamil general knowledge points | தெரிந்து கொள்ளுங்கள் | பொது அறிவு களஞ்சியம்

Tamil general knowledge points | தெரிந்து கொள்ளுங்கள் | பொது அறிவு அதிசயம்
வியந்து தான் போவீர்கள் !!!

* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.

* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.

* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.

* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.


Tamil general knowledge points | தெரிந்து கொள்ளுங்கள் | பொது அறிவு களஞ்சியம்


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'தெரிந்து கொள்ளுங்கள்!..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
தெரிந்து கொள்ளுங்கள்!..
Tamil Fire
5 of 5
Tamil general knowledge points | தெரிந்து கொள்ளுங்கள் | பொது அறிவு களஞ்சியம் வியந்து தான் போவீர்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News