ஆண் அடிமை ஆனான்!!! | Tamil247.info

ஆண் அடிமை ஆனான்!!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Aan Pen adimai adhikkam tami247 24x7 | ஆண் அடிமை ஆனான் | ஆண் ஆதிக்கம் | பெண்ஆதிக்கம்

Aan Pen adimai adhikkam tami247 24x7 | ஆண் அடிமை ஆனான் | ஆண் ஆதிக்கம் | பெண்ஆதிக்கம்
 Aan Pen adimai adhikkam tami247 & 24*7
ஆண் அடிமை ஆனான்!!!
***********************

திருமணத்தால் பெண்களுக்கு சுதந்திரம் பறிபோகிறது. அவள் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு கணவன் என்ன சொல்கிறானோ அதை செய்கிறாள் என்றொரு பொய்ப் பிரச்சாரம் இங்கே இருக்கிறது. உண்மையில் ஆண்கள் அதே திருமணத்தால் அடிமை ஆக்கப்படுகிறார்கள். தாலி கட்டும் நாள் முதலே பெண் அவனை ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்கிறாள். சரி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

1 . தாலி கட்டும் நேரத்தில் பெண் ஜம்பமாக உடக்கார்ந்து கொள்கிறாள். மாப்பிள்ளையோ பாவம் மரியாதையாக அவளுக்கு குனிந்து தாலி கட்டுகிறான். இங்கே ஆரம்பிக்கிறது ஆண் பெண்ணுக்கு ஆமாம் போடுற வேலை. இங்கே குனிந்தவன் பாவம் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்து விடுகிறான்.

2. ஓமத்தை சுற்றி வருகிற அந்த வழிபாட்டில் ஆண் மகன் முன்னே செல்லவேண்டும். பெண் பின்னால் வருவாளாம். எதற்கென்று தெரியுமா ஒரு வேலை எதவாது பிரச்சினை என்றாள் முதலில் ஆண் விழுந்து விடுவான். அதன் பிறகு பெண் உஷாராக தப்பித்து விடுவாள். எல்லாம் பெண்களின் முன் எச்சரிக்கை.

3. ஆண் பகலெல்லாம் வேலை செய்து வரவேண்டுமாம். பெண் மட்டும் வீட்டில் சமையல் செய்யவேண்டுமாம். எல்லாம் இப்போது குக்கர் செய்கிறது. சாப்பாட்டிற்கு ஒரு குக்கர், காய்கறி வேகவைக்க ஒரு குக்கர், என்று அனைத்திற்கும் குக்கர் வந்துவிட்டது. இது ஒரு சாக்கு இவர்களுக்கு. அனைத்து வேலைகளும் 11 மணிக்கு முடிந்துவிடும். பிறகென்ன மெகா தொடர்கள். ஏன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். நாங்கள் நிம்மதியாக சமைத்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலை செய்வது என்னமோ சுலபம் என்றும் வீட்டு வேலை கஷ்டம் என்று ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள் இவர்கள். நாம் அதை நம்பக்கூடாது.

4. எதற்காக பிறக்கும் குழந்தைக்கு முதலில் அம்மா என்று சொல்லித்தரவேண்டும். ஏன் அப்பா என்று சொல்லிதரக் கூடாதா. அதுவும் ஒரு முன்னெச்சரிக்கை. பெண்களின் ஆதிக்கம்.

5. குழந்தைக்கு காதுகுத்து விழாவில் ஏன் பெண்ணின் அண்ணன் அல்லது தம்பியின் மடியில் வைத்து குத்தவேண்டும். ஏன் நம் தம்பி அல்லது அண்ணன் மடியில் மேல் வைத்து குத்தினால் ஊசி உள்ளே இறங்காதா. இங்கேயும் பெண்ணாதிக்கம்.

இது வெறும் கடுகளவுதான். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இனிமேல் ஆண் ஆதிக்கம் என்று எந்த பெண்ணாவது சொன்னால் நீங்கள் இதை எல்லாம் எடுத்து கூறுங்கள். (முடிந்தால் குறையுங்கள்)

நன்றி : ஈகரை

Aan Pen adimai adhikkam tami247 24x7 | ஆண் அடிமை ஆனான் | ஆண் ஆதிக்கம் | பெண்ஆதிக்கம் | aan en adimai aanan | Tamil thoughts | sindhanai


Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஆண் அடிமை ஆனான்!!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஆண் அடிமை ஆனான்!!!
Tamil Fire
5 of 5
Aan Pen adimai adhikkam tami247 24x7 | ஆண் அடிமை ஆனான் | ஆண் ஆதிக்கம் | பெண்ஆதிக்கம்  Aan Pen adimai adhikkam tami247 & 24*7 ஆண் அ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News