16 ஏப்ரல் 2013

, ,

உன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும்!..

unnal mudiyum vetri nichayam உன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும் | you can win | tamil247 | motivational post in tamil

unnal mudiyum vetri nichayam உன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும் | you can win | tamil247 | motivational post in tamil
You can Win - Unnal Mudiyum
ஹைதராபாத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது சென்னையில் இருந்த எனது குடும்பத்தின் வற்புறுத்தலில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒன்னரை மாதம் நோட்டிஸ் பீரியடில் வேலை செய்துகொண்டிருக்கும்போது சென்னையில் ஒரு வேலை கிடைத்தது. அதை நம்பிக்கொண்டிருந்தவேளையில் கடைசி நிமிடத்தில் அந்த ப்ராஜெக்ட் கைவிட்டு போனது என்று கைவிறித்து வேலை இல்லயென்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வீட்டில் அமர்ந்துகொண்டு வேலை தேடியபோது இதுவரை நான் செய்திராத முற்றிலும் மாறுபட்ட களத்தில் வேலை கிடைத்தது. அதாவது அதுவரை Product Development ல் இருந்த எனக்கு Business Developmentல்இப்போது நான் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தில் சென்னை ரீஜினல் மேலாளராக வேலை கிடைத்தது.

எனது இதுவரையான தொழில் அனுபவத்திற்கு இது முற்றிலும் வேறு களம் என்பதால் இதில் சேர எனக்கு சிறுத்தயக்கம். ஆனாலும் என் நண்பர்களும் என் அம்முவும் " உன்னால் முடியும். எதை செய்தாலும், நீ பிரகாசிப்பாய்" என்று கொடுத்த நம்பிக்கையில் இந்த வேலையில் சேர்ந்தேன். ஒவ்வொரு மாதமும் ரிவ்யூ மீட்டிங்க் நடக்கும்.. சேர்ந்து ஆறு மாதங்களில் கடைசி ரிவ்யூ வரை நான் என்னவெல்லாம் செய்தேன் என்பதனை மட்டும் கேட்டுகொண்டு ஓரிரு அறிவுரைகளை கூறினார்கள்..


இன்று எனது பெங்களூரில் உள்ள எனது நிறுவனத்தின் இந்திய தலைமை அலுவலகத்தில் மீண்டும் ரிவ்யூ மீட்டிங்க் நடந்தது. அதில் எங்களின் பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியாவின் மேனேஜிங்க் டைரக்ட்டர் மற்றும் எனது ரிப்போர்ட்டிங்க் இயக்குனர் இருந்தனர். அதில் பல விசயங்களை பற்றி அலசப்பட்டது. கடைசியில் முத்தாய்ப்பாக எனது மேனேஜிங்க் டைரக்டர் " உங்கள் பெர்ஃபாமன்ஸ் பற்றி அனைவரிடமும் (7 Country Head + 1 my reporting boss) கேட்டறிந்தேன்.அனைவரும் மிகச்சிறப்பாய் செய்கிறாய் என்று கூறினார்கள்..வாழ்த்துகள்..இதே போல் உங்கள் சேவை தொடர வேண்டும்" என்று பாராட்டியபோது மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. சந்தோசமாய் மீடிங்க் முடித்து வெளி வரும்போது " உன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும்" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்..!
- Surya

unnal mudiyum vetri nichayam உன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும் | you can win | tamil247 | motivational post in tamil
எனதருமை நேயர்களே இந்த 'உன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும்!..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News