25 ஏப்ரல் 2013

அப்பா...அரசியல் என்றால் என்ன...? - நாராயணசாமி ஜோக்

Arasiyal endraal enna Narayanaswamy joke | அப்பா, அரசியல் என்றால் என்ன நாராயணசாமி ஜோக் | Tamil jokes | Tamil SMS jokes

நாராயணசாமி ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி.

ஒரு நாள் அவரது மகன் அவரிடம் கேட்டான்,

"அப்பா...அரசியல் என்றால் என்ன...?"


நாராயணசாமி நன்றாக் யோசித்துவிட்டு மகனுக்குப் புரியும்படி சொன்னார்,

"நல்லது. உனக்கு நான் அதனை இப்படி விளங்கப்படுத்துகிறேன். நமது இந்தக் குடும்பத்தில் அதிகாரமுள்ளவன் நான். ஆகவே நான் அரசாங்கம். எனக்கு ஆலோசனை சொல்பவள் அம்மா. ஆகவே அவள் அமைச்சர். வேலைக்காரி நமது தயவில் வாழ்கிறாள். எனவே அவள் மக்கள். நீ அடிக்கடி கேள்வி கேட்பவன். ஆகவே நீ ஊடகம். உனது சின்னத் தம்பிப் பாப்பாதான் நாட்டின் எதிர்காலம்."

பையனுக்குக் கொஞ்சம் புரிந்தது, மீதி புரியவில்லை. யோசித்துக் கொண்டே அவன் படுக்கைக்குப் போய் விட்டான்.

சிறிது நேரத்திற்குள் தம்பி அழும் சத்தம் கேட்டது. பையன் எழுந்து சென்று பார்த்தான். தம்பி சிறுநீர் கழித்துவிட்டு, ஈரத்தில் படுக்க முடியாமல் அழுது கொண்டிருந்தான். அவனுக்கு உடை மாற்ற வேண்டும்.

அம்மாவின் அறைக்குள் போனான் சிறுவன். அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

வேலைக்காரியின் அறைக்குள் போகுமுன், சாவித் துவாரத்தால் பார்த்தான். அங்கே வேலைக்காரியை நாராயணசாமி ********** கொண்டிருந்தார்.

பையன் பேசாமல் வந்து படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்ததும் நாராயணசாமியிடம் சொன்னான்,

"அப்பா..அரசியல் என்பதன் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது...!"

"கெட்டிக்காரன்...சரி, என்னவென்று சொல் பார்க்கலாம்.." என்றார் நாராயணசாமி.

மகன் சொன்னான்,

"அரசாங்கத்தால் மக்கள் கொடுமைக்குள்ளாகும் போது அமைச்சர்கள் குறட்டை விட்டுத் தூங்குவார்கள். ஊடகங்கள் எதுவும் பேசாமல் மௌனமாகிவிடும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க யாருமே இருக்க மாட்டார்கள்!''

- Jayant Prabakar

Arasiyal endraal enna Narayanaswamy joke | அப்பா, அரசியல் என்றால் என்ன நாராயணசாமி ஜோக் | Tamil jokes | Tamil SMS jokes
எனதருமை நேயர்களே இந்த 'அப்பா...அரசியல் என்றால் என்ன...? - நாராயணசாமி ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News